BSNL 99 திட்டம்.. 90 நாள் வேலிடிட்டி திட்டம்.. 300 லைவ் TV சேனல் திட்டம்.. அடுக்கிட்டே போறீங்களே அண்ணாத்தே..
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு ஆபரேட்டர் (Government owned telecom operator) நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது 99 ரூபாய் திட்டத்தை (BSNL Rs 99 plan) அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டம் (BSNL 90 days plan) மற்றும் 300 லைவ் டிவி சேனல்களை (300 Live TV channels) வழங்கும் திட்டம் என்று ஒரே வாரத்தில், இந்திய மக்களின் மனம் நெகிழும்படியான செயல்களை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் செய்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டங்களின் மூலம் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களின் நிலை சிக்கலை சந்தித்துள்ளது. உண்மையை சொல்ல போனால், பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில், அதிக நன்மை கொண்ட திட்டங்களை அறிமுகம் செய்து வருவதினால், தனியார் டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனங்கள் திக்குமுக்காடியுள்ளன.

பிஎஸ்என்எல் ரூ. 99 திட்டம் (BSNL Rs 99 Plan):
இந்த புதிய பிஎஸ்என்எல் 99 பிளான் (BSNL 99 Plan) ஒரு வித்தியாசமான மலிவு விலை விருப்பமாகும். வெறும் 100 ரூபாய்க்குள் பிஎஸ்என்எல் சிம் கார்டை ஆக்டிவ் (BSNL SIM card active) நிலையில் வைத்துக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் குறைந்த செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது.
இந்த திட்டம் 17 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை (BSNL 17 days validity) வழங்குகிறது. அதாவது, உங்கள் BSNL SIM கார்டை 17 நாட்களுக்கு ஆக்டிவ் நிலையில் வைக்க அனுமதிக்கிறது. இந்த திட்டத்துடன் உங்களுக்கு டேட்டா (data) நன்மை மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மை போன்ற வேறெந்த நன்மைகளும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மலிவு விலையில் 100 ரூபாய் செலவிற்குள் BSNL சிம்மை பயன்படுத்த விரும்புவோருக்கு இது சிறந்த பிளான்.
பிஎஸ்என்எல் ரூ. 439 வாய்ஸ் ஒன்லி திட்டம் 90 நாள் வேலிடிட்டி (BSNL Rs 439 voice only plan 90 days validity):
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின் கீழ் பிஎஸ்என்எல் (BSNL) அறிமுகம் செய்த திட்டம் தான் புதிய பிஎஸ்என்எல் ரூ. 439 வாய்ஸ் ஒன்லி திட்டம் (BSNL Rs 439 voice only plan). இந்த திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகிறது (BSNL 90 days validity plan). இது 90 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் உடன் 300 SMS நன்மையை வழங்குகிறது. பட்ஜெட் விலையில் வாய்ஸ் ஒன்லி பிளான் (BSNL voice only plan) தேடுபவர்களுக்கு இது சிறந்த திட்டமாகும்.
BSNL நிறுவனம் சமீபத்தில் அதன் டைரக்ட்-டு-மொபைல் சேவையை (BSNL direct-to-mobile) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதை BSNL நிறுவனம் BiTV என்று சுருக்கமாக குறிப்பிடுகிறது. இந்த சேவையின் கீழ் BSNL பயனர்கள் எந்தவித கட்டணமும் இன்றி, கிட்டத்தட்ட 300 லைவ் டிவி சேனல்களை (300 live TV channels) நேரடியாக அவர்களின் மொபைல் மூலம் பார்த்து மகிழலாம் என்று கூறியுள்ளது. இந்த சேவை இந்தியாவின் பல்வேறு இடங்களில் தற்போது பயன்படுத்த கிடைக்கிறது. புதுச்சேரியில் இந்த சேவை கடந்த மாதம் நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பித்தக்கது.


Click it and Unblock the Notifications








