Home
News

பிஎஸ்என்எல்லுக்கு நேரம் வந்துடுச்சு.. வெறும் ரூ.98 போதும்.. அன்லிமிடெட் டேட்டா.. 22 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.98 விலையில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்குகிறது. சொல்லப்போனால், இந்த திட்டத்தில் அதிகபட்ச வரம்பை மீறினாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி எத்தனை நாட்கள்? தினசரி டேட்டா எவ்வளவு? உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஓடிடி மற்றும் ஆன்லைன் கேமிங் வருகைக்கு பிறகு டேட்டா பயன்பாடு மக்களிடையே அதீத வளர்ச்சி அடைந்துவிட்டது. ஆகவே, தினசரி டேட்டா அதிகமாக கிடைக்கும் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களையே மக்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்து வருகின்றனர்.

வெறும் ரூ.98 போதும்.. அன்லிமிடெட் டேட்டா.. 22 நாட்கள் வேலிடிட்டி!

இதனால், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் டேட்டாவுக்காக மட்டுமே பிரத்யேக திட்டங்களை அறிவித்து வருகின்றன. ஆனால், இந்த திட்டங்களின் சலுகைகளை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் அவை குறைவாகவே இருக்கின்றன. அப்படி மற்ற நிறுவனங்கள் வழங்காத சலுகையை கொடுக்கும் ரூ.98 திட்டத்தை பற்றி இப்போது, தெரிந்து கொள்வோம்

பிஎஸ்என்எல் ரூ 98 திட்ட விவரங்கள் (BSNL Rs 98 Plan Details): இது முழுக்க முழுக்க டேட்டாவை மட்டுமே வழங்கும் திட்டமாகும். வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படாது. இந்த திடத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டா கிடைக்கும். ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் 22 நாட்களுக்கு 48 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், உங்களது தினசரி டேட்டா 2 ஜிபியை முழுமையாக நீங்கள் பயன்படுத்திவிட்டாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இதை மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகுந்த சலுகை கொண்டதாக இருக்கிறது. இதேபோல ரூ.16, ரூ.94, ரூ.97, ரூ.151 மற்றும் ரூ.198 விலையில் நல்ல நல்ல சலுகைகள் கொண்ட டேட்டா திட்டங்கள் இருக்கின்றன. அதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.

ரூ.16 விலையில் கிடைக்கும் டேட்டா திட்டத்தில், 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 1 நாள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. மற்ற நிறுவனங்கள் ரூ.20க்கு மேல் மட்டுமே 2 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. ரூ.94 விலையுள்ள திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவுடன் 200 நிமிடங்கள் வாய்ஸ் கால் சலுகையும் கிடைக்கிறது.

இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த 3 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு பொருந்தும். நாளொன்றுக்கு பொருந்தாது. ரூ.97 மதிப்புள்ள டேட்டா திட்டத்தில், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 22 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 44 ஜிபி டேட்டா மொத்தமாக கிடைக்கிறது.

அடுத்து ரூ.151 விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட டேட்டா திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் மொத்தமாக 40 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதோடு ஜிங் (Zing) சப்கிரிப்ஷனும் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், ரூ.198 விலையில் அதிகபட்ச சலுகைகள் கொண்ட டேட்டா திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் 40 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

இந்த நாட்களில் தினசரி 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆகவே, உங்களுக்கு மொத்தமாக 80 ஜிபி டேட்டா ஒதுக்கப்படுகிறது. நீங்கள் தினசரி டேட்டா 2 ஜிபியை முழுமையாக பயன்படுத்தினாலும், அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா கிடைக்கும். அதோடு லோக்துன் (Lokdhun) மற்றும் அரினா மொபைல் கேமிங் சேவை (Arena Mobile Gaming Service) சலுகைகளும் வழங்கப்படும். இப்படி ஏராளமான சலுகைகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 98 Plan Comes With Unlimited Data 22 Days Validity 2GB Daily Here Data Pack Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X