குறைந்த விலையில் சிறந்த சலுகையை வழங்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் மலிவு திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன்

இந்தநிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் சலுகைகளில் சில மாற்றங்களை செய்துவருகிறது, அதன்படி தற்போதுள்ள திட்டங்களைத்திருத்தும் வேலையில் இறங்கியுள்ளது. ஆபரேட்டர் அதன் அடிப்படை கட்டண பேக்குகள்,வவுச்சர்கள் மற்றும் அதன் முதல் ரீசார்ஜ் கூப்பன்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இருந்தபோதிலும் டெல்கோ ஒரு வட்டத்தில் மட்டுமே சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது, அதாவது சென்னையில் மட்டுமே இப்போது மாற்றங்கள் வந்துள்ளது.

இதுதவிர இரண்டு பேஸ்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் FRC106, FRC107, FRC108, PV153, PV186, PV365, PV429, PV485, PV666, PV999, PV1699, PV1999, மற்றும் PV2399 போன்ற திட்டங்களை
திருத்தியுள்ளதாகவும், இதுதவிர இரண்டு பேஸ் பேக்குகளையும் திருத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவிந்த ஆர்டர்கள்: பிரியாணி பொட்டலம் மட்டும் 5 1/2 லட்சம்- ஊரடங்கில் கோலகல விற்பனை- ஸ்விகி அறிக்கை!குவிந்த ஆர்டர்கள்: பிரியாணி பொட்டலம் மட்டும் 5 1/2 லட்சம்- ஊரடங்கில் கோலகல விற்பனை- ஸ்விகி அறிக்கை!

ரூ.94 மற்றும் ரூ.95 திட்டங்கள்

ரூ.94 மற்றும் ரூ.95 திட்டங்கள்

திருத்தப்பட்ட பிஎஸ்என்எல் அடிப்படை திட்டங்கள்
தற்சமயம் ரூ.94 மற்றும் ரூ.95 திட்டங்கள் ஆனது 3ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிடங்கள் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டங்கள் 60நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி மற்றும் மும்பை இரண்டிலும் ஒரே நெட்வொர்க்கில் இலவச
அழைப்பையும் ரோமிங்கையும் நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், திட்டங்கள் சில வரம்புகளுடன்
வருகின்றன, அங்கு நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நன்மைகளை பயன்படுத்த முடியும்.

94-திட்டத்தில்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94-திட்டத்தில் இலவச அழைப்பு நன்மைகள் முடிந்தபிறகு 1 நிமிடத்திற்கு ரூ .1.3 பைசா வசூலிக்கிறது. அதேபோல் ரூ .95 திட்டத்தில் இலவச அழைப்பு நன்மைகள் முடிந்த பிறகு உள்ளூர் அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ.0.02 மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ.0.024 வசூலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 மற்றும் ரூ.95 திட்டங்கள் ஆனது 60நாட்களுக்கு இலவச அழைப்பாளர் டியூன் வசதியை வழங்குகின்றன.

 நிறுவனம் அன்மையில் தமிழ்நாட்டில்

பிஎஸ்என்எல் நிறுவனம் அன்மையில் தமிழ்நாட்டில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது, இவை வீட்டில் இருந்து வேலை செய்யும் மக்களுக்கு வேண்டி அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த திட்டங்களின் விலை ரூ.151 மற்றும் ரூ.251-ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.151-திட்டம் ஆனது

அதன்படி பிஎஸ்என்எல் ரூ.151-திட்டம் ஆனது 30நாட்களுக்கு 40ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.251-திட்டம் ஆனது 70ஜிபி டேட்டா நன்மையை 30நாட்களுக்கு வழங்குகிறது. டாக்டைம் வசதி இல்லாததால் டேட்டா சலுகைகளை வழங்குவதற்காக இந்த பேக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL Revises Plans To Offer 3GB Data And 100 Minutes For Calling : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X