அப்படி போடு.. வெறும் ரூ.91 போதும்.. வேலிடிட்டி-ஐ அள்ளி வழங்கும் BSNL.. ஜியோ, ஏர்டெல் கொஞ்சம் ஓரமா நில்லுங்க..
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தினாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் கட்டணத்தை உயர்த்தாமல் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி அசத்தி வருகிறது. அதேசமயம் இந்நிறுவனம் விரைவில் 4ஜி மற்றும் 5ஜி சேவையும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் ரூ.91 ரீசார்ஜ் திட்டத்தில் அதிக நாள் வேலிடிட்டி வழங்கி உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனம் சமீபத்தில் 25 சதவீதம் வரை ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தின. இதனால் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிக மக்கள் இணைந்து வருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனமும் மலிவு விலையில் புதிய திட்டங்கள் மற்றும் எக்கச்சக்க சலுகைகளை வழங்கிய வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில் பிஎஸ்என்எல் ரூ.91 திட்டத்தில் அதிக நாள் வேலிடிட்டி நன்மையை வழங்கி உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.91 திட்டத்தில் (BSNL Rs 91 prepaid recharge plan) ரீசார்ஜ் செய்தால் 60 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஆனால் வேலிடிட்டி தவிர இந்த திட்டத்தில் எந்த சலுகையும் கிடைக்காது. அதாவது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் வாய்ஸ் கால் அழைப்புகளை மேற்கொள்ள அனைத்து நெட்வொர்க்கிற்கும் நிமிடத்திற்கு 15 பைசா வசூல் செய்யப்படுகிறது. பின்பு எஸ்எஸ்எஸ்-க்கு 25 பைசா மற்றும் டேட்டாவுக்கு 1 பைசாவும் வசூல் செய்யப்படுகிறது.
குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.91 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது மூலம் சிம் கார்டை நீண்ட நாட்கள் செயலில் வைத்திருக்க உதவும். ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களையும் வைத்துள்ளது. அந்த திட்டங்களை இப்போது பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 199 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை (2GB data benefit) வழங்குகிறது. மேலும் இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் (BSNL prepaid plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையைப் பெறுகிறது. இத்துடன் உங்களுக்குத் தினமும் இலவசமாக 100 தினசரி எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music), மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் (BSNL Rs 249 prepaid recharge plan) திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 666 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 105 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. பின்பு டியூன்ஸ், ஜிங்க் மியூசிக் மற்றும் ஆஸ்ட்ரோடெல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications








