சத்தியமா.. 1 நாளுக்கு தினமும் 1 ரூபாய் கொடுங்க போதும்.. BSNL-ன் 90 நாள் திட்டம்.. எந்த திட்டம்? என்ன நன்மை?
பிஎஸ்என்எல் (BSNL) என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நெட்வொர்க் இப்போது இந்தியாவில் ரூ. 91 விலையில் (BSNL Rs 91 Plan) ஒரு மலிவு விலை பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL prepaid recharge plan) அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் மிகவும் நம்பகமான தொலைத்தொடர்பு (Telecom) நிறுவனமாக BSNL மாறி வருகிறது. இதுவரை எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்கிடாத விலையில் 90 நாட்கள் வேலிடிட்டியை பிஎஸ்என்எல் வழங்கி அசத்தியுள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்று அறியப்படும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் (private telecom industries) திடீரென நடைமுறைப்படுத்திய விலை அதிகரிப்பிற்கு பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனம் தான்யா நியாயமான மனுஷன் என்று மக்களே புகழ்ந்து தள்ளும் அளவிற்கு பிஎஸ்என்எல் மிகவும் தீவிரமாக வேலை செய்து வருகிறது. வேலை என்றதும் சாதரணமான வேலையென்று நினைத்துவிடாதீர்கள் மக்களே, வெறித்தனமான வேலையை BSNL செய்து வருகிறது.

BSNL மேல சாத்தியமா.. 1 நாளுக்கு தினமும் 1 ரூபாய் கொடுங்க போதும்:
குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் விலை ஏற்றத்திற்கு மத்தியில், மலிவு விலை ரீசார்ஜ்களை அதிக நன்மையுடன் வழங்கி BSNL மக்களை கவர்ந்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, இதுவரை ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) போன்ற நிறுவனங்களே வழங்க முடியாத 91 ரூபாய் விலையில் 90 நாள் வேலிடிட்டி நன்மை திட்டத்தை BSNL அறிமுகம் செய்துள்ளது. இது தற்போது BSNL-ன் பல வட்டங்களில் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ. 91 ப்ரீபெய்ட் பிளான் (BSNL Rs 91 Prepaid Plan):
பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ரீசார்ஜ் திட்டமானது 91 ரூபாய் விலையுடன் பிஎஸ்என்எல் 91 பிளான் (BSNL Rs 91 Plan) என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெறும் 91 ரூபாய் விலையில், அதன் வாடிக்கையாளர்களுக்கு 91 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்கி அசத்துகிறது. பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM Card) இரண்டாம் சிம் கார்டாக வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இது பெஸ்ட் திட்டமாக திகழ்கிறது.
1 நாளுக்கு தினமும் 1 ரூபாய் மட்டுமே செலவு:
இந்த பிஎஸ்என்எல் ரூ. 91 திட்டம் மலிவு விலையில், அதிக செலவின்றி மற்றும் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற சிக்கல்கள் எதுவுமின்றி BSNL சிம் கார்டை தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஆக்டிவ் நிலையில் வைத்திருக்க உதவுகிறது. 1 நாளுக்கு 1 ரூபாய் செலவு என்ற விதத்தில் இந்த திட்டம் உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் வைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 91 திட்டம் பலன்கள் (BSNL Rs 91 Plan Benefits):
இந்த திட்டம் ஒரு நிமிடத்திற்கு 15 பைசா என்ற கட்டணத்துடன் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. அதேபோல், 1MB டேட்டாவிற்கு 1 பைசா என்ற கட்டணத்தை வசூலிக்கிறது. இறுதியாக 1 எஸ்எம்எஸ்-க்கு 25 பைசா என்ற கட்டணத்தை இத்திட்டம் வசூலிக்கிறது. கூடுதல் அழைப்பு நன்மை அல்லது டேட்டா நன்மை வேண்டும் என்ற தேவைக்கு, நீங்கள் பிஎஸ்என்எல்-ன் டாக்டைம் வவுச்சர் அல்லது டேட்டா வவுச்சர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








