இந்த காலத்துல யார் இப்படி தருவா? ரூ.90 விலையில் வாரி வழங்கும் BSNL.. அதிக ரீசார்ஜ்களை குவிக்கும் திட்டம்?
இத்தனை நாட்களாக புதிய வாடிக்கையாளர்களை தனது நெட்வொர்க்கின் கீழ் சேர்க்க போராடி வந்த பிஎஸ்என்எல் காட்டில் இப்போது அடைமழை வெளுத்து வாங்குகிறது என்றே நாம் கூறலாம். புதிய வாடிக்கையாளர்களின் வரவு இப்போது பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், மிகுந்த குஷியில் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கி வருகிறது. இன்னும் 2 மாதங்களுக்குள் தமிழ்நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவை கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான வேலைகளை BSNL தற்போது மும்முரம் காட்டிவருகிறது.
இந்த ஏறுமுக மாற்றத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள பிஎஸ்என்எல் இப்போது பல புதிய திட்டங்களை அதிக நன்மையுடன் வழங்கி, மக்களை தன்வசம் ஈர்த்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ரீசார்ஜ் திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 90 பிளான் (BSNL Rs 90 Plan). இந்த திட்டம் வெறும் 90 ரூபாய் விலையில், அதன் வாடிக்கையாளர்களுக்கு 91 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது.
இந்த காலத்துல யார் இப்படி தருவா? ரூ.90 விலையில் வாரி வழங்கும் BSNL:

பிஎஸ்என்எல் ரூ. 90 பிளான் (BSNL Rs 90 Plan):
ஒரு நாளுக்கு ஒரு ரூபாய் கட்டணம் என்று வைத்தால் கூட, ஒரு நாள் வேலிடிட்டி இலவசமாக கிடைக்கிறது. இந்த திட்டம் இந்திய குடிமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உண்மையை சொல்ல போனால் மக்களை வெகுவாக இந்த திட்டம் கவர்ந்துள்ளது. இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 90 திட்டம் குறைந்த விலையில் சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் வைத்திருக்க விரும்பும் வடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஒரு நிமிடத்திற்கு 15 பைசா என்ற கட்டணத்துடன் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. அதேபோல், 1MB டேட்டாவிற்கு 1 பைசா என்ற கட்டணத்தை வசூலிக்கிறது. இறுதியாக 1 எஸ்எம்எஸ்-க்கு 25 பைசா என்ற கட்டணத்தை இத்திட்டம் வசூலிக்கிறது. கூடுதல் அழைப்பு நன்மை அல்லது டேட்டா நன்மை வேண்டும் என்ற தேவைக்கு, நீங்கள் பிஎஸ்என்எல் வழங்கும் டாக்டைம் வவுச்சர் அல்லது டேட்டா வவுச்சர் திட்டங்களை ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம்.
உண்மையில், மலிவு விலையில் 91 நாள் வேலிடிட்டி கிடைக்குமென்றால், யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். இந்த 91 நாட்களுக்கு இன்கமிங் அழைப்புகள் முற்றிலும் இலவசம் என்பதனால் இதை மக்கள் அதிகமாக விரும்பி இப்போது ரீசார்ஜ் செய்கிறாரகள். சமீபத்தில் புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கிய புதிய பயனர்கள் கூட, இந்த திட்டத்தை அதிகமாக ரீசார்ஜ் செய்வதாக கூறப்படுகிறது.
அவர்களுடைய இரண்டாம் நிலை சிம் ஆன பிஎஸ்என்எல் சிம் கார்டை ஆக்டிவிடில் வைக்க இந்த திட்டத்தை தொடர்ந்து ரீசார்ஜ் செய்வதாக கூறியுள்ளனர். இந்தியாவில் உள்ள ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் கூட இந்த விலையில் ரீசார்ஜ் திட்டத்தை வழங்க முன்வராத நிலையில், அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) டெலிகாம் நிறுவனம் வழங்கி அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








