Home
News

BSNL 90 ரூபாயில் போட்ட போடு.. Jio, Airtel, Vi பயனர்கள் படும் பாடு.. புதிய பிளானால் BSNL பக்கம் கூட்டம்..

அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) டெலிகாம் நிறுவனத்தை மக்கள் வெறும் டம்மி பீஸ் என்று நினைத்து வந்தார்கள். ஆனால், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் திடீரென நடைமுறைப்படுத்திய விலை அதிகரிப்பிற்கு பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனம் தான் சூப்பர் என்று அந்தர் பல்டி அடிக்கும் அளவிற்கு டெலிகாம் துறையில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. மலிவு விலையில் புதிய-புதிய திட்டங்களை அறிமுகம் செய்து BSNL முன்னேறி வருகிறது.

தனியார் நிறுவனங்கள் கண்மூடித்தனமாக ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்ததன் விளைவாக, கடுப்பில் சுற்றி திரிந்த மக்கள் மற்றும் விலை ஏற்றத்தால் தவித்து வந்த மக்கள் என்று எல்லோரும் இப்போது அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒரு சூப்பர் ஹீரோ போல பார்க்கிறார்கள். காரணம், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே இப்போது விலை அதிகரிப்பு எதுவும் இல்லாமல், இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் தொலைத்தொடர்பு சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.

BSNL 90 ரூபாயில் போட்ட போடு.. Jio, Airtel, Vi பயனர்கள் படும் பாடு..

BSNL 90 ரூபாயில் போட்ட போடு.. Jio, Airtel, Vi பயனர்கள் படும் பாடு:

இத்தனை நாட்களாக புதிய வாடிக்கையாளர்களை தனது நெட்வொர்க்கின் கீழ் சேர்க்க போராடி வந்த பிஎஸ்என்எல் காட்டில் இப்போது புதிய வாடிக்கையாளர்களின் வரவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், மிகுந்த குஷியில் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கி வருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) கிடைக்குமென்று அறிவித்துள்ளது. இதற்கான வேலைகளை BSNL மும்முரம் காட்டிவருகிறது.

இந்த ஏறுமுக மாற்றத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள பிஎஸ்என்எல் இப்போது பல புதிய திட்டங்களை அதிக நன்மையுடன் வழங்கி, மக்களை தன்வசம் ஈர்த்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ரீசார்ஜ் திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 90 பிளான் (BSNL Rs 90 Plan). இந்த திட்டம் வெறும் 90 ரூபாய் விலையில், அதன் வாடிக்கையாளர்களுக்கு 91 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 90 பிளான் (BSNL Rs 90 Plan):

இந்த திட்டம் இந்திய குடிமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உண்மையை சொல்ல போனால் மக்களை வெகுவாக இந்த திட்டம் கவர்ந்துள்ளது. இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 90 திட்டம் குறைந்த விலையில் சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் வைத்திருக்க விரும்பும் வடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒரு நிமிடத்திற்கு 15 பைசா என்ற கட்டணத்துடன் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது.

அதேபோல், 1MB டேட்டாவிற்கு 1 பைசா என்ற கட்டணத்தை வசூலிக்கிறது. இறுதியாக 1 எஸ்எம்எஸ்-க்கு 25 பைசா என்ற கட்டணத்தை இத்திட்டம் வசூலிக்கிறது. கூடுதல் அழைப்பு நன்மை அல்லது டேட்டா நன்மை வேண்டும் என்ற தேவைக்கு, நீங்கள் பிஎஸ்என்எல் வழங்கும் டாக்டைம் வவுச்சர் அல்லது டேட்டா வவுச்சர் திட்டங்களை உங்கள் தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

உண்மையில், மலிவு விலையில் 91 நாள் வேலிடிட்டி கிடைக்குமென்றால், யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். இந்த 91 நாட்களுக்கு இன்கமிங் அழைப்புகள் முற்றிலும் இலவசம் என்பதனால் இதை மக்கள் அதிகமாக விரும்பி இப்போது ரீசார்ஜ் செய்கிறாரகள். சமீபத்தில் புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கிய புதிய பயனர்கள் கூட, அவர்களுடைய இரண்டாம் நிலை சிம் ஆன பிஎஸ்என்எல் சிம் கார்டை ஆக்டிவிடில் வைக்க இந்த திட்டத்தை தொடர்ந்து ரீசார்ஜ் செய்வதாக கூறியுள்ளனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 90 Prepaid Plan With 91 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X