Home
News

மாசம் ரூ.150 க்கு.. கேபிள் TV கதையை முடிச்சுவிட்ட BSNL.. 450 சேனல், OTT, 90GB டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ்!

அரசாங்கத்திற்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனம் ஆன பிஎஸ்என்எல் (BSNL) அதன் பயனர்களுக்கு பல வகையான பாக்கெட்-ஃப்ரெண்ட்லி ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டுள்ளது. அதில் - வெறும் 5 ருபாய் என்கிற தினசரி செலவின் கீழ் (அல்லது ரூ.149.50 பைசா என்கிற மாதாந்திர செலவின் கீழ்) 6 மாதங்களுக்கு உங்களுடைய பிஎஸ்என்எல் சிம் கார்ட்டை ஆக்டிவ் (BSNL SIM Card Active Recharge) ஆக வைத்து இருக்கும் ஒரு பிளானை பற்றித்தான் இங்கே விரிவான பார்க்க உள்ளோம்.

அது என்ன திட்டம்? நீண்ட கால ரீசார்ஜ் விருப்பங்களை விரும்பும் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான இந்த திட்டத்தின் விலை ரூ.897 ஆகும். இந்தியா முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்கள் அல்லது 6 மாதங்கள் ஆகும். 897-ஐ 180 கொண்டு வகுத்தால் 4.98 வரும். அதாவது இது ஒரு நாளைக்கு ரூ.5 க்கும் குறைவான செலவின் கீழ் உங்களுக்கு 6 மாத கால வேலிடிட்டியை வழங்குகிறது.

மாசம் ரூ.150 க்கு.. கேபிள் TV கதையை முடிச்சுவிட்ட BSNL!

பிஎஸ்என்எல் ரூ.897 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எம்என்டிஎல் நெட்வொர்க் உட்பட அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், இலவச இன்கம்மிங் மற்றும் ரோமிங் கால்கள் கிடைக்கும். மேலும் ரூ.897 திட்டத்தின் பயனர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் மற்றும் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் மொத்தம் 90ஜிபி அதிவேக டேட்டாவையும் பெறுவார்கள்.

அதாவது இந்த திட்டத்தின் கீழ் தினசரி டேட்டா வரம்பு என்று எதுவும் இல்லை, எனவே பயனர்கள் தங்கள் தேவைக்கேற்ப டேட்டாவை பயன்படுத்தலாம். அதிவேக டேட்டா வரம்பு (90ஜிபி) பயன்படுத்தப்பட்ட பிறகு, இந்த திட்டம் 40கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் இண்டர்நெட்-ஐ தொடர்ந்து வழங்கும்.

வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய வழக்கமான நன்மைகளுடன், இந்த திட்டத்தின் பயனர்கள் பிஐடிவி-க்கான (BiTV) இலவச அணுகலையும் பெறுவார்கள். இதில் 450 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மற்றும் பல ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும். பட்ஜெட் விலையில் டிவி / ஓடிடி போன்ற விருப்பங்களை தேடும் பொழுதுபோக்கு பிரியர்களுக்கு இந்த திட்டத்தை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிஎஸ்என்எல் 4ஜி மற்றும் 5ஜி எப்போது அறிமுகமாகும்? அடுத்த 3-4 மாதங்கள் என்கிற காலக்கெடுவில் பிஎஸ்என்எல் நிறுவனம் 2 தரமான வேலைகளை பார்க்க உள்ளது. பிஎஸ்என்எல்) நிறுவனமானது எப்போது அதன் 4ஜி அறிமுகம் தொடர்பான பணிகள் முடிவுக்கு வரும் மற்றும் எப்போது அதன் 5ஜி அறிமுகம் தொடங்கும் என்கிற டைம்லைனை (Timeline) அறிவித்துள்ளது.

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் 4ஜி சேவையை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஜூன் 2025 இறுதிக்குள் 1 லட்சம் சைட் சைட்கள் என்கிற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை பிஎஸ்என்எல் 75,000க்கும் மேற்பட்ட சைட்கள் என்கிற இலக்கை அடைந்துள்ளது. மேலும் 80,000க்கும் மேற்பட்ட சைட்கள் 'டிப்லாய்' (Deploy) செய்யப்பட உள்ளன. ஜூன் 2025 இறுதிக்குள், ஒரு லட்சம் சைட்கள் ஆக்டிவ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா "மே - ஜூன் 2025 க்குள் அனைத்து 100,000 சைட்களையும் செயல்படுத்தும் இலக்கை வைத்துள்ளோம். இதை தொடர்ந்து, ஜூன் மாதம் தொடங்கி 4ஜி சேவையிலிருந்து 5ஜி சேவைக்கு மாறுவோம்" என்று கூறி உள்ளார்.

அதாவது 1 லட்சம் சைட்களை ஆக்டிவ் செய்த பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவையை தொடர்ந்து விரிவுபடுத்தும். 4ஜி விரிவாக்கத்திற்கு உதவுவதற்காக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்திற்கு ஆர்டரை நீட்டிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் தயாராக உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 1 லட்சம் 4ஜி தளங்கள் ஒரு நல்ல மைல்கல் என்றாலும், அவை இந்தியா முழுவதும் சேவை செய்ய போதுமானதாக இல்லை.

5ஜி சேவையை பொறுத்தவரை, பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே டெல்லியில் 5ஜி எஸ்ஏ-வை சோதிக்க திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், டிசிஎஸ் உதவியுடன் தற்போதுள்ள 4ஜி தளங்களை 5ஜி-க்கு மேம்படுத்தும் பணிகளை செய்யவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள 4ஜி சைட்களை ஒரு எளிய மென்பொருள் உந்துதலுடன் 5ஜி என்எஸ்ஏ-க்கு மேம்படுத்த முடியும் என்பதை டாடா குழுமம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 897 with 180 Days Validity 90GB Data Unlimited Voice Daily 100 SMS BiTV 450 Channels OTT
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X