BSNL போட்ட போடு.. மாதாந்திரம் ரூ.149-க்கு 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 90 ஜிபி டேட்டா!
மாதாந்திரம் வெறும் ரூ.149 மதிப்பிலான திட்டத்தில் 160 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 90 ஜிபி டேட்டாவை கொடுத்து, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களையே மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். இதுபோக முதல் 24 நாட்களுக்கு 107 ஜிபி கூடுதல் டேட்டாவை கொடுத்து பிஎஸ்என்எல் கஸ்டமர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்வோம்.
டெலிகாம் கட்டணங்கள் உயர்ந்த பிறகு பிஎஸ்என்எல் நிறுவனம் கஸ்டமர்களை வாரித்தூக்க தொடங்கிவிட்டது. நாளுக்கு நாள் புதிய கஸ்டமர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பிஎஸ்என்எல் 3ஜி சிம் கார்டுகளை 4ஜிக்கு மாற்றும் கஸ்டமர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் அடிமட்ட விலையிலான திட்டங்கள் மட்டுமே.

பிஎஸ்என்எல் ரூ 897 திட்ட விவரங்கள் (BSNL Rs 897 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் அடிமட்ட விலையில் 180 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. அதாவது, மாதத்துக்கு வெறும் ரூ.149 செலவில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் டேட்டா போன்ற பல்வேறு சலுகைகள் வாரி வழங்குகிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்கள் 90 ஜிபி டேட்டாவை பெறலாம்.
இதுவொரு லம்ப்-சம் டேட்டாவாகும். ஆகவே, 180 நாட்கள் வேலிடிட்டியில் எப்போது வேண்டுமானாலும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ள முடியும். அதேபோல 90 ஜிபிக்கு பிறகும் ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, பிஎஸ்என்எல்லில் வழக்கமாக கிடைக்கும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த டேட்டா சலுகைகள் போக, 104 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தின் டேட்டா 90 ஜிபி மட்டுமல்லாமல், கூடுதல் டேட்டா 104 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஆனால், இந்த கூடுதல் டேட்டாவை முதல் 24 நாட்களுக்குள் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால், காலாவதி செய்யப்பட்டு விடும்.
இப்போது மற்ற சலுகைகளை தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். அதேபோல 6 மாதங்களில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் செய்து கொள்ளலாம்.
ஆகவே, 6 மாதங்களுக்கு அடிமட்ட விலையில் சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதைவிட மலிவான விலையில் வாய்ஸ் கால்கள் சலுகை மட்டும் போதும் என்றால் பின்வரும் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு செல்லுங்கள்.
பிஎஸ்என்எல் ரூ 699 திட்ட விவரங்கள் (BSNL Rs 699 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் அதிகப்படியான வேலிடிட்டி மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகை அடிமட்ட விலையில் கிடைக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தை போல கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 150 நாட்களுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம்.
இந்த 150 நாட்களிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். ஆனால், அதிகப்படியான டேட்டா சலுகையை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், நாளொன்றுக்கு 500 எம்பி வீதம் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் டேட்டா கிடைக்கிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு பயன்படுத்த கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








