Home
News

Jio, Airtel-க்கு கும்பிடு.. மாதம் ரூ.163 க்கு 165 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 24 ஜிபி டேட்டா!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களால் கனவிலும் கொடுக்க முடியாத விலைக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், திட்டங்களை வைத்துள்ளது. இதில் மாதத்துக்கு ரூ.180 செலவில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுத்துள்ளது. இந்த திட்டத்தின் விவரங்கள் இதோ.

டெலிகாம் மார்கெட்டில் 6 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டங்களானது, தனியார் நிறுவனங்களிடம் பெரும்பாலும் கிடையாது. அப்படியே கிடைத்தாலும், 6 மாத வேலிடிட்டி கொண்ட திட்டங்களை மலிவான விலைக்கு நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5 மாதங்கள், 6 மாதங்கள் வேலிட்டி கொண்ட திட்டங்கள் இருக்கின்றன.

Jio, Airtel-க்கு கும்பிடு.. மாதம் ரூ.163 க்கு 165 நாட்கள் வேலிடிட்டி!

அதே நேரத்தில் மலிவான விலைக்கும் கிடைக்கின்றன. இதில் 165 நாட்கள் வேலிடிட்டியுன் பிஎஸ்என்எல் ரூ.897 திட்டம் கிடைக்கிறது. மாத செலவை கணக்கிட்டால், ரூ.163 மட்டுமே தேவைப்படுகிறது. அதாவது, 5.5 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்துக்கு ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஏற்படும் செலவு வெறும் ரூ.163ஆக மட்டுமே இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.897 திட்ட விவரங்கள் (BSNL Rs 897 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 4 சலுகைகள் கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள், டேட்டா, போஸ்ட் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன. வாய்ஸ் கால்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கொடுக்கப்படுகின்றன.

டேட்டாவை பார்க்கையில் 24 ஜிபி டேட்டாவை இந்த பிஎஸ்என்எல் ரூ.897 திட்ட கொடுக்கிறது. இந்த டேட்டாவை வேலிடிட்டி முழுவதும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 165 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பாக இந்த டேட்டாவை முடித்துவிட்டால், 40 கேபிபிஎஸ் வேகத்திலான போஸ்ட் டேட்டாவை இந்த பிஎஸ்என்எல் ரூ.897 திட்ட கொடுக்கும்.

மேலும், கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், டேட்டா வவுச்சர்களுக்கு கஸ்டமர்கள் செல்லாலம். இதுபோன்ற மலிவான திட்டத்தின் தினசரிக்கு எஸ்எம்எஸ்கள் கிடைக்காது. ஆனால், இந்த பிஎஸ்என்எல் ரூ.897 திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. எப்படி பார்த்தாலும், இந்த விலைக்கு தனியார் நிறுவனங்களிடம் திட்டங்கள் கிடையாது.

இதேபோல மற்றொரு திட்டம் தினசரி டேட்டாவுடன் கிடைக்கிறது. அதில் 150 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அதன் பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கும். இந்த திட்டத்தின் விலை ரூ.997 ஆக இருக்கிறது. இது ரூ.100 அதிகமாக இருந்தாலும், டேட்டாவில் முந்துகிறது.

பிஎஸ்என்எல் ரூ.997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 150 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 30 நாட்கள் வீதம் 5 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த மாதங்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கொடுக்கப்படுகின்றன.

மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். மொத்தமாக 300 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கும். அதே நேரத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் பெற்று கொள்ளலாம். இதில் டேட்டா மற்றும் வேலிடிட்டிக்கு ஏற்ப திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 897 Plan With Unlimited Voice Calls 24 GB Data 165 Days Validity Check Plan Voucher
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X