Home
News

ஒரே BSNL ரீசார்ஜ்.. மாதாந்திரம் ரூ.149 போதும்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 90 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி 6 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை அடிமட்ட விலைக்கு பிஎஸ்என்எல் (BSNL) கொடுத்து வருகிறது. இதில் லம்ப்-சம் டேட்டா மற்றும் தினசரி டேட்டா (Daily Data) சலுகைகளை கொண்ட 2 ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plan) விவரங்களை இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். இதில் எந்த திட்டம் உங்களுக்கு நல்ல சலுகைகளை கொடுக்கிறது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

ரூ.100 விலை வித்தியாசத்தில் பிஎஸ்என்எல் ரூ 897 திட்டம் மற்றும் பிஎஸ்என்எல் ரூ 997 திட்டம் கிடைக்கிறது. முதலாவது, திட்டத்தில் லம்ப்-சம் டேட்டாவும், 2ஆவது திட்டத்தில் தினசரி டேட்டாவும் கிடைக்கிறது. அதே நேரத்தில் வேலிடிட்டியிலும் விலைக்கு ஏற்ப வேறுபாடுகள் இருக்கிறது. ஒவ்வொரு திட்டத்தின் சலுகைகளையும் முழுமையாக பார்த்தால் மட்டுமே அதை தெரிந்து கொள்ள முடியும்.

ஒரே BSNL ரீசார்ஜ்! மாதாந்திரம் ரூ.149 போதும்.. 180 நாட்கள் வேலிடிட்டி!

பிஎஸ்என்எல் ரூ 897 திட்ட விவரங்கள் (BSNL Rs 897 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, 180 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. ஆனால், டேட்டா மட்டும் லம்ப்-சம் சலுகை மூலம் கிடைக்கிறது. ஆகவே, 90 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

இந்த டேட்டாவானது, 180 நாட்களுக்கும் பொருந்தும். ஆகவே, லிமிட் இல்லாமல் பயன்படுத்தலாம். டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால், போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படுகிறது. ஆகவே, கூடுதல் கட்டணம் இல்லாமல், குறைவான வேகத்தில் தொடர்ந்து டேட்டாவை பெற்று கொள்ளலாம். டேட்டா லம்ப்-சம் சலுகையில் கிடைத்தால், எஸ்எம்எஸ் சலுகையும் அப்படித்தான் இருக்கும்.

ஆனால், இந்த திட்டத்தில் தினசரிக்கு 100 என்னும் கணக்கில் வழக்கமாக கிடைத்ததை போலவே கொடுக்கப்படுகிறது. வாய்ஸ் கால்களும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, நேஷனல் ரோமிங் சலுகைகளை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு மாதம் வெறும் ரூ.149 மட்டுமே செலவாகிறது. இதைவிட அதிக டேட்டா வேண்டுமானால், அடுத்த திட்டம் சரியாக இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ 997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): இந்த திட்டமானது ரூ.100 விலை அதிகமாக கிடைக்கிறது. ஆனால், வேலிடிட்டி 160 நாட்கள் மட்டுமே வருகிறது. ஏனென்றால், இந்த திட்டத்தில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஆகவே, 160 நாட்களுக்கு மொத்தமாக 320 ஜிபி டேட்டாவை பெறலாம்.

இது முந்தைய திட்டத்தைவிட மிகவும் அதிகமான டேட்டா சலுகையாகும். இதனாலேயே விலை கூடுதலாக இருக்கிறது. அதே நேரத்தில் வேலிடிட்டியும் குறைவாக இருக்கிறது. இதை தவிர மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.

இதில் எந்த திட்டம் பெஸ்ட்? இந்த திட்டங்கள் விலைக்கு ஏற்பவே சலுகைகளை கொடுக்கின்றன. இருப்பினும், கம்மியான விலைக்கு அதிக வேலிடிட்டி கொடுக்கும் பிஎஸ்என்எல் ரூ 897 திட்டமானது இப்போதைக்கு பெஸ்ட் என்று சொல்லலாம். ஏனென்றால், பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்காத பகுதிகளில் எவ்வளவு டேட்டா இருந்தாலும் இன்டர்நெட் வேகம் குறைவாகவே இருக்கிறது.

ஆகவே, டேட்டாவை முழுமையாக பயன்படுத்த முடியாது. இதனால், வேலிடிட்டி அதிகமாக கிடைக்கும் திட்டமே இப்போதைக்கு பெஸ்ட் ஆப்ஷனாகும். ஒருவேளை நாடு முழுவதும் 4ஜி சேவைகள் கிடைக்கும்பட்சத்தில் 2ஆவது திட்டம் உங்களுக்கு பக்கா ஆப்ஷனாக இருக்கும். இதில் உங்களது பகுதியில் கிடைக்கும் டேட்டா வேகத்தை பொறுத்து ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 897 Plan With 180 Days Validity Unlimited Voice Vs BSNL Rs 997 Plan With 160 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X