BSNL-க்கு சுத்தி போடு.. 180 நாட்கள் வேலிடிட்டி.. வெறும் ரூ.897 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 90 ஜிபி டேட்டா!
இதைவிட மலிவான விலைக்கு கொடுக்க முடியாது என்று அடித்து சொல்லும்படியான விலைக்கு 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுக்கிறது. லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) மட்டுமல்லால், வாய்ஸ் கால்கள் (Voice Calls), மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகளை கொடுக்கிறது. இந்த அரையாண்டு வேலிடிட்டி திட்டத்தின் (Half Yearly Validity Plan) விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுக்கு பிறகு ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள், வாய்ஸ் ஒன்லி திட்டங்களை அடிமட்ட விலைக்கு கொடுக்க தொடங்கின. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனமானது, முன்னதாகவே வாய்ஸ் மட்டுமல்லாமல் டேட்டாவையும் சேர்த்து அடிமட்ட விலைக்கு கொடுத்து வருகிறது.

சொல்லப்போனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கிடைக்கும் அரையாண்டு மற்றும் ஒரு வருட வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் நம்ப முடியாதபடி அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது என்பதே உண்மையாகும். ஏனென்றால், நாடு முழுவதும் இன்னும் 4ஜி சேவையை கொடுக்க தொடங்காததால், இந்த விலையை அப்படியே வைத்திருக்கிறது. ஆனால், பல்வேறு நகரங்களில் 4ஜி சேவைகள் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டிலும் பல்வேறு சர்க்கிள்களில் 4ஜி சேவை கிடைக்கிறது. இங்கு இருக்கும் கஸ்டமர்களுக்கு லாபமாக பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. இதில் ரூ 897 விலையிலான ப்ரீபெய்ட் திட்டம் பட்டையை கிளப்புகிறது. ஏனென்றால், 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 897 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs 897 Recharge Plan): இந்த திட்டம் லம்ப்-சம் சலுகையுடன் கிடைக்கும் திட்டமாகும். ஆகவே, குறைவான டேட்டாவே கிடைக்கும் என்று நினைக்க வேண்டும். மொத்தமாக 90 ஜிபி டேட்டா கொடுக்கிறது. இதை நாளொன்றுக்கு கணக்கிட்டால், 500 எம்பி வீதம் கிடைக்கிறது. ஒரு நாளுக்கு 500 எம்பி என்பது குறைவாக தோன்றலாம்.
ஆனால், இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் டேட்டாவே கிடைக்காது. இதேபோல திட்டம் ஏர்டெல் மற்றும் ஜியோவில் முன்னதாக கிடைத்தது. ஆனால், அதில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. இந்த வேலிடிட்டிக்கே வெறும் 24 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் 90 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இந்த டேட்டா சலுகைக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் பேர் யூசேஜ் பாலிசி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது, 180 நாட்கள் வேலிடிட்டி முடிவதற்கு முன்னதாகவே 90 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி முடித்துவிட்டால், மீதம் இருக்கும் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் உங்களுக்கு 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை கொடுக்கப்படும்.
இதற்கு அடுத்த வாய்ஸ் கால்கள் சலுகை இருக்கிறது. இதில் எந்த குறையும் கஸ்டமர்களுக்கு இருக்காது. ஏனென்றால், 180 நாட்களில் எந்த நெட்வொர்க்குக்கு வேண்டுமானாலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) செய்து கொள்ள முடியும். இந்த சலுகைகளையே ரூ 897 விலைக்கு பிஎஸ்என்எல் கொடுக்கிறது.
180 நாட்களுக்கு சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்கவே மற்ற நிறுவனங்களில் ரூ.2000-க்கு மேல் செலவாகும். ஆனால், பிஎஸ்என்எல்லில் ரூ.1000 பட்ஜெட்டில் அதை செய்யலாம். ஆகவே, பிஎஸ்என்எல் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் இந்த திட்டத்தை ஆப்ஷனில் எடுக்கலாம். டேட்டா மட்டுமே குறைவாக இருக்கும். ஆனால், ரொம்ப குறைவாக இருக்காது.


Click it and Unblock the Notifications








