ஏழைக்கு ஏத்த பிஎஸ்என்எல்.. மாதத்துக்கு ரூ.149-க்கு 180 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 90 ஜிபி டேட்டா!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படியான விலையில் பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு 180 நாட்கள், 160 நாட்கள், 365 நாட்கள் மற்றும் 425 நாட்கள் வேலிடிட்டியில் ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) கிடைக்கிறது.
இதில் மாதத்துக்கு ரூ.149 செலவில் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் முதலாவதாக தொடங்குகிறது. இவற்றில் லம்ப்-டேட்டா, லம்ப்-சம் எஸ்எம்எஸ் அல்லது தினசரி லிமிட் டேட்டா, தினசரி லிமிட் எஸ்எம்எஸ் என்று சலுகைகள் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கும். ஆகவே, சலுகைகளை தெரிந்து கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ 897 திட்டம் (BSNL Rs 897 Plan): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் 180 நாட்கள் (6 மாதங்களுக்கு) டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது. இந்த 6 மாதங்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு வருகிறது.
இதில் 90 ஜிபிக்கான லம்ப்-சம் டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது. 90 ஜிபி டேட்டாவுக்கு தினசரி லிமிட் (Daily Limit) கிடையாது. ஒரு நாளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 6 மாதங்களுக்கு சிம் ஆக்டிவ் வேண்டுமானால், பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 997 திட்டம் (BSNL Rs 997 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்காது. அதைவிட 20 நாட்கள் குறைவாக மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், அதற்கு ஏற்ப டேட்டாவில் கூடுதல் சலுகை கிடைக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா கிடைத்தது. ஆனால், இதில் தினசரி லிமிட்டில் டேட்டா கொடுக்கப்படுகிறது.
ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்கள் 160 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த 2 ஜிபிக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் கஸ்டமர்களுக்கு டேட்டா கிடைக்கும். 5 மாதங்களுக்கு மேல் இந்த திட்டம் பெஸ்ட் ஆப்ஷன்.
பிஎஸ்என்எல் ரூ 1198 திட்டம் (BSNL Rs 1198 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகைகள் மாதாந்திர லிமிட்டில் கொடுக்கப்படும். அதாவது, இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்றால், ஒரு மாதத்துக்கு இவ்வளவு டேட்டா மற்றும் இவ்வளவு எஸ்எம்எஸ் என்று சலுகைகள் 12ஆக பிரித்து கொடுக்கப்படுகிறது.
ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு ஒரு மாதத்துக்கு 3 ஜிபி டேட்டா, 30 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இதேபோல 12 மாதங்கள் முழுவதும் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் கொடுக்கப்படும். அதேபோல வாய்ஸ் கால்கள் சலுகையும் மாதத்துக்கு 300 நிமிடங்கள் என்று பிரித்து கொடுக்கப்படுகிறது. இது அனைத்து நெட்வொர்க்குக்கும் பொருந்துகிறது.
பிஎஸ்என்எல் ரூ 1499 திட்டம் (BSNL Rs 1499 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கிட்டத்தட்ட வாய்ஸ் ஒன்லி திட்டம் என்றே சொல்லலாம். இருப்பினும், டேட்டாவும் கிடைக்கிறது. அதாவது, 365 நாட்கள் வேலிடிட்டியில் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். ஆனால், டேட்டாவானது ஒட்டுமொத்தமாகவே 24 ஜிபி மட்டுமே பயன்படுத்த கிடைக்கிறது.
இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கொடுக்கப்படவில்லை. ஆகவே, 365 நாட்களுக்கு முன்பே 24 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி முடித்துவிட்டால், டேட்டாவுக்கு மட்டும் கட்டணம் இருக்கும். ஆனால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை தொடர்ந்து கிடைக்கிறது. இப்போது அடுத்த வருடாந்திர திட்டத்தை பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ 1999 திட்டம் (BSNL Rs 1999 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் தினசரி டேட்டா கிடைக்காது. ஆனால், லம்ப்-சம் டேட்டா மிகவும் அதிகமாகவே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்றால், அந்த நாட்களுக்கு மொத்தமாக 600 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
ஆகவே, ஒரு கணக்காக எடுத்து கொண்டால் நாளொன்றுக்கு 1.5 ஜிபிக்கு மேல் டேட்டா கிடைக்கிறது. இதுபோக வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 2399 திட்டம் (BSNL Rs 2399 Plan): பிஎஸ்என்எல் மட்டுமல்லாமல், மற்ற டெலிகாம் நிறுவனங்களை ஒப்பிட்டாலும், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் மட்டுமே 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 12 மாதங்கள் அல்ல, மொத்தமாக 14 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆகவே, இந்த பிஎஸ்என்எல் வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 425 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா + அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, டேட்டாவில் துளியும் குறையில்லாமல் இருக்கிறது.
மேலும், எஸ்எம்எஸ் சலுகையானது முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 100 வீதம் பயன்படுத்த கிடைக்கிறது. இந்த 6 மாதம், 12 மாதம் மற்றும் 14 மாதம் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் உங்களுடைய பட்ஜெட்டுக்கு எந்த திட்டம் சரியாக இருக்கும் என்பதை பார்த்து ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் திட்டங்கள் வராது.
அதே நேரத்தில் டேட்டா வேகம் மற்ற நிறுவனங்களை போல் இருக்காது. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளுக்கு ஏற்ப வேகத்தில் மாற்றங்கள் இருக்கும். அதே போல செகண்டரி சிம் கார்டாக பிஎஸ்என்எல் இருந்தால், அடிமட்ட விலையில் வாய்ஸ் கால்களுடன் வருடம் முழுவதும் அந்த சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க முடியும். இதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். இதுபோன்ற செய்திகளுக்கு பின் தொடருங்கள்.


Click it and Unblock the Notifications








