Home
News

ஏழைக்கு ஏத்த BSNL.. இனி மாசம் ரூ.179 போதும்.. 165 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 24 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு மாதத்துக்கு ரூ.179 செலவில் 165 நாட்கள், அதாவது 5 மாதங்களுக்கும் மேல் வேலிடிட்டி மட்டுமல்லாமல், லம்ப்-சம் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கும் திட்டங்கள் மலிவான விலைக்கு கொடுக்கப்படும். ஆனால், அதில் எஸ்எம்எஸ்களும் லம்ப்-சம் சலுகையில் கிடைக்கும். இருப்பினும், இந்த திட்டத்தில் தினசரிக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிம் ஆக்டிவ் திட்டங்களில் அடிமட்ட விலை கொண்ட திட்டமாகவும் இது இருக்கிறது. 5 மாதங்களுக்கும் மேல் சலுகை கிடைக்கிறது.

ஏழைக்கு ஏத்த BSNL.. இனி மாசம் ரூ.179 போதும்.. 165 நாட்கள் வேலிடிட்டி!

பிஎஸ்என்எல் ரூ 897 திட்ட விவரங்கள் (BSNL Rs 897 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் 5 மாதங்களுக்கும் மேல் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, 165 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இந்த நாட்களுக்கு 24 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது லம்ப்-சம் டேட்டாவாக இருப்பதால், தினசரி லிமிட் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கிறது. அதாவது, 165 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பாக 24 ஜிபி டேட்டாவையும் பயன்படுத்திவிட்டால், மீதமுள்ள நாட்கள் முழுவதும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படும். ஆனால், எஸ்எம்எஸ் சலுகைகள் அப்படி கிடையாது. தினசரிக்கு 100 கணக்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் (Roaming Voice Calls) சலுகைகள் அன்லிமிடெட்டாக கொடுக்கப்படுகிறது. 5 மாதங்களை கணக்கில் எடுத்து கொண்டாலும், இந்த திட்டத்துக்கு மாதம் வெறும் ரூ.179 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, இது அடிமட்ட விலைக்கு கிடைக்கும் திட்டமாகவே இருக்கிறது.

இதேபோல மலிவான திட்டம் வேண்டும், ஆனால் டேட்டா தினசரிக்கு இருக்க வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு ரூ.997 திட்டம் பக்காவாக இருக்கும். இதில் லம்ப்-சம் டேட்டாவுக்கு பதிலாக தினசரி டேட்டா கொடுக்கப்படும். மற்ற சலுகைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு முந்தைய திட்டத்தைவிட 15 நாட்கள் வேலிடிட்டி குறைவாக கிடைக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தில் 165 நாட்கள் கிடைத்தது. ஆனால், இதில் 150 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், தினசரி டேட்டா (Daily Data) சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது.

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். அதே நாளில் 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 150 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், இந்த நாட்கள் முழுவதுக்கும் மொத்தமாக 300 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது முந்தைய திட்டத்தைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஆகவே, இதிலும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு மாத செலவை கணக்கிட்டு பார்த்தால், ரூ.199 கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது. டேட்டாவை வைத்து பார்த்தால், இதுவும் மலிவாகவே இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 897 Plan With 165 Days Validity Unlimited Voice Calls 24GB Data Check 5 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X