Home
News

Jio, Airtel-ஐ முடிச்ச BSNL.. மாதம் ரூ.179 க்கு 165 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 24 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் கனவிலும் கொடுக்க முடியாதபடி மாதத்துக்கு ரூ.179 செலவில் 5 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கொடுக்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுக்கிறது. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த வேலிடிட்டி முழுவதும் கொடுக்கிறது.

ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் இந்த திட்டத்தில் 165 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 5 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கிடைக்கிறது. இருப்பினும், 5 மாதங்களை கணக்கில் எடுத்து 1 மாதத்துக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால் வெறும் ரூ.179 மட்டுமே பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது.

Jio, Airtel-ஐ முடிச்ச BSNL.. மாதம் ரூ.179 க்கு 165 நாட்கள் வேலிடிட்டி!

பிஎஸ்என்எல் ரூ.897 திட்ட விவரங்கள் (BSNL Rs 897 Plan Details): இந்த திட்டத்தை பெறும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு 165 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls) கிடைக்கிறது. மேலும், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்களும் (STD & Roaming Voice Calls) வருகிறது.

மொத்தமாக 24 ஜிபி டேட்டாவை கொடுத்துள்ளது. இது லம்ப்-சம் டேட்டா சலுகையாக இருக்கிறது. இந்த டேட்டா முடிந்த பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்திலான போஸ்ட் டேட்டா (Post Data) தொடர்ந்து கிடைக்கும். இந்த வாய்ஸ் கால்கள் மற்றும் டோட்டா சலுகைகள் போக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது.

இதுபோன்ற மலிவு விலை திட்டத்தில் லம்ப்-சம் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரிக்கு எஸ்எம்எஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல வேலிடிட்டி வேண்டம். ஆனால், தினசரிக்கு டேட்டா சலுகை கிடைக்க வேண்டும் என்றால், மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்திலும் 5 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், தினசரிக்கு டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல தினசரி எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். அதேபோல விலையும் ரூ.100 அதிகமாக இருக்கிறது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இதுவும் மலிவான விலைக்கே கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): இந்த திட்டத்தில் முந்தைய திட்டத்தைவிட வேலிடிட்டி குறைவாக இருக்கும். அதாவது, முந்தைய திட்டத்தில் 165 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், இதில் 150 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கும்.

ஆகவே, 150 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் 300 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி இருக்க முடியும். மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. இந்த டேட்டாவை 2 ஜிபி முடிந்த பிறகு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், அன்லிமிடெட் லோக்கல் கால்கள், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் கிடைக்கிறது.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. இந்த திட்டத்துக்கும் மாத செலவு கம்மியாக இருக்கிறது. அதாவது, 5 மாதங்கள் வேலிடிட்டியை கணக்கில் எடுத்தால், 1 மாதத்துக்கு ரூ.199 மட்டுமே தேவையாக இருக்கிறது. ஆகவே, 2 ப்ரீபெய்ட் திட்டங்களிலும் சிம் ஆக்டிவ் மற்றும் டேட்டாவுக்கு ஏற்ப ஆப்ஷனில் எடுக்க வேண்டி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 897 Plan With 165 Days Validity Unlimited Voice 24GB Data Check More Than 5 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X