Home
News

BSNL.. ஆனா தங்கம் சார்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. மாசம் ரூ.150-க்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 90 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் மலிவு விலை திட்டங்களை பார்த்தால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் மூக்கில் விரல் வைத்துவிடுவார்கள். 180 நாட்கள் மற்றும் 365 நாட்கள் என்று அதிக வேலிடிட்டி கொண்ட திட்டங்களை மலிவாக களமிறக்கி இருக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற முக்கிய சலுகைகள் இதில் கிடைக்கின்றன. இதில் 6 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் மாதத்துக்கு ரூ.150 செலவில் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 897 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 897 Prepaid Plan): இந்த திட்டத்துக்கு தினசரி டேட்டா மட்டும் கிடைக்காது. மற்றபடி வழக்கமாக கிடைக்கும் சலுகைகள் வருகின்றன. தினசரி டேட்டா இல்லாததால், லம்ப்-சம் டேட்டா குறைவாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். மொத்தமாக 90 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதற்கு பிறகும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது.

BSNL.. ஆனா தங்கம் சார்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. மாசம் ரூ.150-க்கு!

ஆகவே, நாளொன்றுக்கு 500 எம்பி கணக்கில் மொத்தமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இதற்கு தினசரி லிமிட் கிடையாது. தேவைக்கு ஏற்ப அதிகமாகவும் குறைவாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். 180 நாட்களுக்கு முன்பாக 90 ஜிபி டேட்டாவும் முடிந்தால், அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படும்.

இந்த டேட்டா சலுகை போல எஸ்எம்எஸ் சலுகை லம்ப்-சம் முறையில் கொடுக்கப்படவில்லை. வழக்கம்போல நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த 180 நாட்கள் திட்டத்துக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Voice Calls), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது.

இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் 6 மாதங்களுக்கு மலிவான விலைக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வேண்டுமானால், இந்த திட்டம் சரியான தேர்வாக இருக்கிறது. இதேபோல மலிவான விலையில் தினசரி டேட்டாவுடன் வருடாந்திர திட்டம் வேண்டுமானால், மற்றொரு திட்டம் இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 Prepaid Plan): இந்த திட்டத்துக்கு முன்னதாக 12 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், இப்போது பிஎஸ்என்எஸ் 4ஜி சேவைகள் கிடைக்க தொடங்கிவிட்டதால், 330 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டி முழுவதும் 1.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த டேட்டாவுக்கு பிறகு அன்றைய நாளில் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பி கொள்ளலாம்.

330 நாட்கள் வேலிடிட்டி வேண்டாம், முழுதாக 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்தான் வேண்டும் என்றால், பிஎஸ்என்எல்லில் அதிக விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டம் இருக்கிறது. இந்த அதிக விலையையும் மற்ற டெலிகாம் நிறுவனங்களோடு ஒப்பிட்டால், மலிவாகவே இருக்கும். இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan): இந்த பிஎஸ்என்எல் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 12 மாதங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா + 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கொடுக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 897 Plan Offers 180 Days Validity 90GB Data Unlimited Voice Calls Cheapest 6 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X