BSNL சிம் வைத்து இருப்பவர்களுக்கு டபுள் ட்ரீட்.. 165 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!
பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு 150 நாட்கள் மற்றும் 165 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டங்கள் மற்ற நிறுவனங்களைவிட மலிவாக கிடைக்கின்றன. இந்த திட்டங்கள் பல்க் டேட்டா மற்றும் தினசரி டேட்டா என்று இரண்டு சலுகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே, வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவுக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். சலுகைகளை பார்த்தால் புரியவரும்.
பிஎஸ்என்எல் ரூ.897 திட்ட விவரங்கள் (BSNL Rs 897 Plan Offers): குறைந்த செலவில் அதிக பலன்களை தரும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால், டேட்டா, போஸ்ட் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய 4 முக்கிய சலுகைகள் அடங்கியுள்ளன. கால்களை பொறுத்தவரை, நாடு முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) இலவசமாக வழங்கப்படுகின்றன.

டேட்டா சலுகையாக மொத்தம் 24 ஜிபி டேட்டாவை இந்த பிஎஸ்என்எல் ரூ.897 திட்டம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த மொத்த டேட்டாவையும் நிர்ணயிக்கப்பட்ட வேலிடிட்டி காலம் முழுவதும் தங்களின் தேவைக்கேற்ப பிரித்து பயன்படுத்தி கொள்ளலாம். கூடுதல் டேட்டா தேவைப்படும் பட்சத்தில் பயனர்கள் தனியாக டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த திட்டத்திற்கு 165 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதற்கு முன்பாகவே 24 ஜிபி டேட்டாவை தீர்த்துவிட்டால், 40 கேபிபிஎஸ் வேகத்திலான போஸ்ட் டேட்டா இணைப்பு தொடர்ந்து கிடைக்கும். பொதுவாக இவ்வளவு மலிவான திட்டங்களில் தினசரி எஸ்எம்எஸ் கிடைக்காது. ஆனால், இதில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் வழங்கப்பட்டு இருப்பது சிறப்பம்சமாகும்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இந்த விலையில் இத்தனை சலுகைகள் கொண்ட திட்டங்கள் எதுவும் தற்போதைக்குக் கிடைக்கவில்லை. இதேபோல, தினசரி டேட்டா நன்மைகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காகப் பிஎஸ்என்எல் நிறுவனம் மற்றொரு சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்கி வருகிறது. அதன் விலை இந்த திட்டத்தை விட வெறும் 100 ரூபாய் மட்டுமே அதிகமாகும்.
பிஎஸ்என்எல் ரூ.997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Offers): கூடுதல் டேட்டா தேவைக் கொண்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 150 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதாவது, மாதம் 30 நாட்கள் வீதம் கணக்கிட்டால் தொடர்ந்து 5 மாதங்களுக்குப் கஸ்டமர்கள் ரீசார்ஜ் கவலையின்றி தடையற்ற சேவைகளைப் பெற முடியும்.
இந்த வேலிடிட்டி காலம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) இலவசமாகக் கிடைக்கிறது. முக்கியமாக, இதில் நாளொன்றுக்கு 2 ஜிபி அதிவேக டேட்டாவைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஒட்டுமொத்த வேலிடிட்டி காலத்தில் 300 ஜிபி வரையிலான பிரம்மாண்ட டேட்டா நன்மை கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.
ஒருவேளை அன்றாட 2 ஜிபி டேட்டா தீர்ந்தாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா வசதி தொடரும். அத்துடன் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் பெற்றுக்கொள்ளலாம். எனவே, கஸ்டமர்கள் தங்களின் டேட்டா தேவை மற்றும் வேலிடிட்டி விருப்பத்திற்கு ஏற்ப இந்த இரண்டில் தகுந்த திட்டத்தை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
