BSNL-க்கு கும்பிடு.. தினசரி ரூ.4 செலவு.. 6 மாத வேலிடிட்டி.. 90GB டேட்டா, வாய்ஸ், SMS.. பெஸ்டோ பெஸ்ட் பிளான்..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL 180 day plan) தற்போது வழங்கி வருகிறது. இந்த திட்டம் டேட்டா (data) நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice call) நன்மை மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மை என்று எல்லாவற்றையும் வழங்குகிறது. மலிவு விலையில் 6 மாதங்கள் வரையிலான வேலிடிட்டி (BSNL 6 month validity plan) நன்மையை கொடுக்கும் ஒரே தொலைத்தொடர்பு (telecom) நிறுவனமாக BSNL மட்டுமே திகழ்கிறது.
சரி, இந்த திட்டத்தின் விலை என்ன? இத்துடன் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க. இந்திய தொலைத்தொடர்பு துறையில் இதுவரை பின்தங்கி, பெரியளவில் மக்களை ஈர்க்காத ஒரு நிறுவனமாக பார்க்கப்பட்டு வந்த பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், சமீபத்தில் மின்னல் வேகத்தில் அதீத வளர்ச்சியை கண்டுள்ளது. அரசுக்கு சொந்தமான BSNL நெட்வொர்க் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற உதவியது தனியார் டெலிகாம் நிறுவனங்களின் விலை ஏற்றம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

BSNL-க்கு கும்பிடு.. தினசரி ரூ.4 செலவு.. 6 மாத வேலிடிட்டி:
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களின் திடீர் விலை ஏற்றத்திற்கு (private telecom price hike) பிறகு, மக்கள் விரும்பும் மலிவு விலை திட்டங்களை அதிக நன்மையோடு வழங்கும் ஒரே நெட்வொர்க் ஆபரேட்டராக (network operator) பிஎஸ்என்எல் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
தனியார் டெலிகாம் நிறுவனங்களின் விலை ஏற்றத்தை கண்டித்து, பிஎஸ்என்எல் பக்கம் வந்த வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள BSNL தொடர்ந்து பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அப்படி பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்தவொரு அட்டகாசமான திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 897 திட்டம் (BSNL Rs 897 Plan). இந்த திட்டம் 180 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (validity) நன்மையை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 897 திட்டம் (BSNL Rs 897 Plan):
இந்த திட்டம் அணைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கு இலவசமான வாய்ஸ் கால் நன்மையை அன்லிமிடெட் (unlimited voice calls) ஆக வழங்குகிறது. இந்த திட்டம் லோக்கல் (local), STD மற்றும் நேஷனல் ரோமிங் (national roaming) சேவைகளை அன்லிமிடெட் ஆக எந்தவித கட்டணமும் இல்லாமல் வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளையும் 180 நாட்களுக்கு கிடைக்கும் படி செய்கிறது.
பிஎஸ்என்எல் 879 பிளான் (BSNL 879 Plan) தினசரி டேட்டா நன்மையை வழங்காது என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு பதிலாக, இந்த திட்டம் மொத்தமாக 90GB ஹை-ஸ்பீட் டேட்டா (high speed data benefit) நன்மையை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்துடன் வழங்கப்பட்டுள்ள 90GB டேட்டா நன்மை முடிந்த பிறகு, இணைய வேகம் 40Kbps ஆக (data speed) குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி ரூ. 4 போதும்.. 6 மாத காலத்திற்கு எந்தவித ரீசார்ஜ் தொல்லையும் இல்லை:
கூடுதல் டேட்டா நன்மை தேவைப்படுபவர்கள் BSNL இன் டேட்டா வவுச்சர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். 6 மாத காலத்திற்கு எந்தவித தொல்லையும் இல்லாமல் ஒரே ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்துவிட்டு, 180 நாட்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை அனுபவிக்க இதுவொரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டம் வெறும் 4 ரூபாய் மலிவு விலை செலவில் இந்த நன்மைகளை உங்களுக்கு 180 நாட்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








