Home
News

ஏழைக்கு ஏத்த பிஎஸ்என்எல்.. மாதம் ரூ.179 க்கு 165 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. 24 ஜிபி டேட்டா!

2026 ஆம் ஆண்டிலும் எந்தவித ரீசார்ஜ் கட்டண மாற்றமும் இல்லாமல் மலிவான விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுத்துள்ளது. மாதத்துக்கு ரூ.179 செலவில் 165 நாட்கள் வேலிடிட்டியை கொடுத்துள்ளது. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைகள் தொடங்கிய பிறகும் மலிவான விலைக்கே திட்டங்கள் கிடைக்கின்றன. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் பிஎஸ்என்எல் ரூ.897 திட்டம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

ஏழைக்கு ஏத்த பிஎஸ்என்எல்.. மாதம் ரூ.179 க்கு 165 நாட்கள் வேலிடிட்டி!

ஏனென்றால், 165 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, 5 மாதங்களுக்கு மேல் 15 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். வெறும் 5 மாதங்களுக்கு கணக்கிட்டாலே மாத செலவு ரூ.179 ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், மொத்த டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுத்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 897 திட்ட விவரங்கள் (BSNL Rs 897 Plan Details): 165 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, 5 மாதங்களுக்கு மேல் மலிவான விலையில் சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் கால்கள் (லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள்) கிடைத்துள்ளது. தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது.

டேட்டா சலுகையை பார்க்கையில் மொத்தமாக 24 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவானது 165 நாட்களுக்கும் சேர்த்து கொடுக்கப்படுகிறது. ஆகவே, இதற்கு மேல் டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, 24 ஜிபிக்கு பிறகு இந்த வேகத்தில் பெறலாம்.

கிட்டத்தட்ட இதே வேலிடிட்டியில் தினசரி டேட்டாவை கொடுக்கும்படி மற்றொரு திட்டம் இருக்கிறது. இதன் விலை மட்டுமே கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஆனால், டேட்டா சலுகையில் முந்தைய திட்டத்தை தூக்கி சாப்பிடும்படி இருக்கும். மேலும், போஸ்ட் டேட்டா தினசரி டேட்டா முடிந்த உடனேயே கொடுக்கப்பட்டுவிடும். இந்த திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): 150 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இது முந்தைய திட்டத்தைவிட 15 நாட்கள் குறைவான வேலிடிட்டியாக இருக்கிறது. ஆனால், தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, 300 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த 2 ஜிபி டேட்டா சலுகை போக முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவை 2 ஜிபி டேட்டா முடிந்தவுடனேயே பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, அன்லிமிடெட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். மேலும், வாய்ஸ் கால்கள் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கின்றன.

ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களின் சலுகையும் இதில் கிடைக்கும். 5 மாதங்களுக்கு மலிவான விலைக்கு ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் இந்த திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மற்ற நிறுவனங்களைவிட மலிவாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 897 Plan 165 Days Validity 24GB Data Local STD Voice Calls 40 Kbps After 24GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X