பழையபடி பட்டையை கிளப்பும் BSNL.. கம்மி பட்ஜெட்ல 165 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. எந்த திட்டம்?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தொடர்ந்து கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதாவது ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் தான் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் தற்போது கூட பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது.
எனவே தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் 150 மற்றும் 165 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இரண்டு திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 897 Prepaid Plan) ஆனது 165 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
இந்த பிஎஸ்என்எல் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டாவை எதிர்பார்க்க முடியாது. அதாவது இந்த திட்டத்தில் மொத்தமாக 24ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவானது வேலிடிட்டி முடிவதுக்கும் பொருந்தும். ஆகவே இந்த டேட்டா முன்கூட்டியே பயன்படுத்தி முடித்தால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
ஒருவேளை கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் டேட்டா வவுச்சர்களை பிஎஸ்என்எல் பயனர்கள் தேர்வு செய்யலாம். அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் அழைப்பு நன்மைகளை மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 150 நாட்கள் ஆகும். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 300ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இதுபோன்ற திட்டங்களில் மூன்று மாதம் தான் வேலிடிட்டி வழங்குகின்றன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.997 விலையில் 150 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. ஆனால் இன்னும் சில மாதங்களில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
