Home
News

பிஎஸ்என்எல் 4ஜி.. 5 நாட்களுக்கு வெச்சாச்சு.. சத்தமில்லாமல் வந்தது மாற்றம்.. வேலிடிட்டியில் என்ன நடக்குது?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் 4ஜி சேவைகளை (4G Services) கொடுத்தாலும், ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்ட் (Postpaid) திட்டங்களில் எந்தவிட கட்டண மாற்றமும் இருக்காதென்று உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும், மறுபக்கம் சத்தமே இல்லாமல் ப்ரீபெய்ட் திட்டங்களில் விலை தவிர மற்ற சலுகைகளில் மாற்றங்கள் நடக்க தொடங்கிவிட்டன. இருப்பினும், இந்த சலுகைகள் மற்ற நிறுவனங்களைவிட மலிவாகவே கிடைப்பதையும் மறுக்க முடியவில்லை. இப்போது, எந்த சலுகையில் மாற்றம் வந்துள்ளது. இதனால் லாபமா அல்லது நஷ்டமா உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.

2024ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்திலேயே நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்னறால், அதன் டவர் நிறுவும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட முடியும் தருவாயில் அவை இருப்பதாகவும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். ஆனால், உள்நாட்டு தொழில்நுட்பத்தால் மேலும் தாமதம் ஏற்பட்டது.

பிஎஸ்என்எல் 4ஜி.. 5 நாட்களுக்கு வச்சாச்சு.. சத்தமில்லாமல் மாற்றம்!

இதனால், பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் மீண்டும் தள்ளிப்போனது. இருப்பினும், பஞ்சாப் போன்ற சில மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் 4ஜி சேவைகள் தொடங்கிவிட்டன. ஆனால், அதை நாடு முழுவதும் எதிர்பார்க்க முடியவில்லை. இந்த சேவைகள் படிப்படியாக இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் பரவலாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 4ஜி சேவைகள் வந்தால் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக டெலிகாம் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் திட்டவட்டமாக அதை மறுத்து, 4ஜி சேவைக்கு பிறகும் அதே விலையிலேயே திட்டங்கள் தொடரும் என்று நம்பிக்கை தெரிவிருந்தனர். இதனால், கஸ்டமர்கள் நிதானமடைந்தனர்.

ஆனால், இப்போது திட்டங்களின் சலுகைகளை பிஎஸ்என்எல் குறைத்துவிடுமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏனென்றால், மற்ற டெலிகாம் நிறுவனங்களைவிட மிகவும் மலிவான விலைக்கு கிடைத்துவந்த பிஎஸ்என்எல் ரூ 88 திட்டத்தின் வேலிடிட்டியானது, 35 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகையை முதலில் பார்த்துவிடுவோம்.

பிஎஸ்என்எல் 4ஜி.. 5 நாட்களுக்கு வச்சாச்சு.. சத்தமில்லாமல் மாற்றம்!

பிஎஸ்என்எல் ரூ 88 திட்ட விவரங்கள் (BSNL Rs 88 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடையாது. ஆனால், 35 நாட்களுக்கு சர்வீஸ் வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. அதேபோல ஆன்-நெட்டில் வாய்ஸ் கால்களை செய்தால் நிமிடத்துக்கு 10 பைசாவும், ஆஃப்-நெட்டில் வாய்ஸ் கால்களை செய்தால் நிமிடத்துக்கு 30 பைசாவும் வசூலிக்கப்பட்டது.

இருப்பினும், மற்ற நிறுவனங்களில் பெறும் சர்வீஸ் வேலிடிட்டிக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட இந்த திட்டம் மலிவாகவே சலுகையை கொடுக்கிறது. அதேபோல ரூ 100-க்கும் கீழ் 35 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டியை இந்த திட்டம் மட்டுமே கொடுக்கிறது. மற்ற நிறுவனங்கள் ரூ 100-க்கும் மேலான விலையிலேயே திட்டங்களை வைத்திருக்கின்றன. இந்த திட்டத்தில் இப்போது 30 நாட்களாக வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது.

இந்த குறைக்கப்பட்ட வேலிடிட்டியை மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிட்டாலும், பிஎஸ்என்எல் நிறுவனமே மலிவான விலையில் சலுகைகளை வழங்குகிறது. ஆனால், இதேபோல மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களிலும் வேலிடிட்டி குறைக்கப்பட்டால், 4ஜி சேவைக்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கும். அதேநேரத்தில் கஸ்டமர்களுக்கு சற்று சலுகைகள் குறைவதை மறுக்க முடியாது.

ஆனால், அதிக விலைக்கு திட்டங்களை பெறும் நிலைமையும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு ஏற்படாது. ஆகவே, ஒரே கல்லில் இரண்டு மாங்க என்ற போக்கில் பிஎஸ்என்எல் நிறுவனம், விலையை ஏற்றாமல் சலுகைகளில் கைவைக்க தொடங்கி இருக்கிறது. இப்போது, 35 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகை வேண்டுமானால் ரூ 107 திட்டமே சரியாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 88 Plan With 35 Days Validity Now Reduced To 30 Days Ahead 4G Service Rollout in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X