அடேங்கப்பா.. ரூ.87 ப்ரீபெய்ட் திட்டத்தில் இவ்வளவு சலுகைகளைத் தருகிறதா BSNL: வாங்க பார்ப்போம்.!
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் அனைத்து வட்டாரங்களிலும் தனது எண்ட்ரி லெவல் திட்டத்தை ரூ.155 ஆக உயர்த்தியது. கூடிய விரைவில் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கி வருகிறது.
அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.87 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அருமையான சலுகைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதாவது பிஎஸ்என்எல் ரூ.87 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது.

மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,ஹார்டி மொபைல் கேம்ஸ்-இன் கேமிங் உள்ளிட்ட அசத்தலான நன்மைகளை வழங்குகிறது ரூ.87 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.87 ப்ரீபெய்ட் திட்டம் 14 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் மட்டும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை தினசரி 1ஜிபி டேட்டா போதாது என்று சொல்லும் பயனர்கள் பிஎஸ்என்எல் ரூ.97 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. அதாவது பிஎஸ்என்எல் ரூ.97 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 15 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த ரூ.97 ப்ரீபெய்ட் திட்டத்திலும் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் நிறுவனம் அற்புதமான திட்டங்களை வழங்குகிறது. அதேசமயம் எக்கசக்க சலுகைகளைக் கூட வழங்குகிறது. ஆனால் இந்நிறுவனம் இன்னும் அனைத்து இடங்களில் 4ஜி சேவையைக் கொண்டுவரவில்லை. மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தற்போது 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. அதாவது ஜியோ, ஏர்டெல் நிறுவனம் தற்போது இந்தியாவில் பல நகரங்களில் 5ஜி சேவையை வழங்கியுள்ளன.
இருந்தபோதிலும் கூடிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும். சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுக்க சுமார் 1 லட்சம் பகுதிகளில் 4ஜி சேவையை வெளியிட இருக்கிறது. பின்பு இதற்காக ஒரு லட்சம் பகுதிகளில் டிசிஎல் உபகரணங்களைப் பயன்படுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் அனுமதி பெற்று இருக்கிறது.
குறிப்பாக டிசிஎஸ் நிறுவனம் நீண்ட காலமாகவே பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிறுவனங்களின் கூட்டணியில் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க் பயன்படுத்த இருக்கிறது. அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனம் 4ஜி வெளியீட்டிற்கு இவ்வாறு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த 4ஜி சேவையை அறிமுகம் செய்தவுடன் அடுத்த ஆண்டு 5ஜி சேவையைக் கூட அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








