இதுபோதுமே.. அடிச்சி புடிச்சி ரீசார்ஜ் பண்ணுவாங்க.. வெறும் 87 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் அன்லிமிடெட் பிளான்!
பிஎஸ்என்எல் (BSNL) வாடிக்கையாளர்கள் வியக்கும் வகையில் ரூ. 87 மதிப்புள்ள பிளானில் (BSNL Rs 87 Plan) நம்ப முடியாத சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் டேட்டா முடிந்த பிறகும் குறைவான வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் (Vodafone) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு நிகராக போட்டிப்போட முடியாமல் தவித்து வந்தாலும் கூட பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு சலுகைகள் கொண்ட ப்ரீபெய்ட் பிளான்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், விரையில் 4ஜி சேவையை தொடங்கிவிருப்பதால், மொத்த ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிளான்களில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.

அந்த வகையில், அன்லிமிடெட் டேட்டா பிளான்களுக்கு லிமிட் வழங்கிவருகிறது. அண்மையில் கூட ரூ.398 ப்ரீபெய்ட் பிளானில் 30 நாட்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த அன்லிமிடெட் டேட்டாவுக்கு லிமிட் கொடுக்கப்பட்டு, நாளொன்றுக்கு அதிகபட்சமாக 2 ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்தும் வகையில், மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால், ரூ. 87 மதிப்புள்ள மலிவான ப்ரீபெய்ட் பிளானில் தினசரி டேட்டா முடிந்த பிறகும் குறைவான வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. அதோடு அன்லிமிடெட் கால்கள் சலுகையும் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி எத்தனை நாட்கள், எவ்வளவு வேகத்தில் இன்டர்நெட் பயன்படுத்த முடியும் உள்ளிட்ட முழு விவரங்கள் பின்வருமாறு.
பிஎஸ்என்எல் ரூ. 87 பிளான் விவரங்கள் (BSNL Rs 87 Plan Details): இந்த பிளான் பெரும்பாலான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் மிகப்பெரும் சலுகையாக பார்க்கப்படுவது என்னவென்றால், தினசரி டேட்டா 1 ஜிபியை முழுமையாக பயன்படுத்திவிட்டாலும், இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும். அதாவது, 1 ஜிபி டேட்டா தீர்ந்துபோன பின்பு, 40Kbps வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். இதுவொரு 14 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானாகும்.
இந்த பிளான் அனைத்து மாநிலங்களிலும் பயன்பாட்டில் இருக்கிறது. இதே போன்ற சலுகைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானும் இருக்கிறது. ரூ.108 ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கும்.
ஆனால், இந்த திட்டம் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








