பலே கில்லாடியா BSNL.. 87 ரூபாய்க்கு இப்படி ஒரு திட்டமா? டேட்டா, வாய்ஸ், SMS எல்லாமே இருக்கா? கூட்டம் கூடுது..
இந்தியாவில் வேகமாக முன்னேறி வளர்ந்து வரும் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், இப்போது மிகமிக மலிவான விலையில் ஒரு புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL prepaid recharge plans) அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம், ரூ. 87 விலையில் தினசரி டேட்டா (data) நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை மற்றும் தினசரி எஸ்எம்எஸ் (SMS) நன்மை போன்றவற்றை வழங்கி, கூடுதலாக இலவச நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி எவ்வளவு? இதன் நன்மைகள் என்ன? என்பதை பார்க்கலாம்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்தியாவில் தற்போது பிஎஸ்என்எல் ரூ. 87 திட்டம் (BSNL Rs 87 Plan) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1GB டேட்டா (data) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் தினசரி டேட்டா வரம்பு முடிந்தவுடன், உங்களுக்கு 40Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (unlimited data) நன்மை வழங்கப்படும்.

பலே கில்லாடியா BSNL.. 87 ரூபாய்க்கு இப்படி ஒரு திட்டம்:
இந்த பிஎஸ்என்எல் 87 பிளான் (BSNL 87 Plan) உங்களுக்கு செல்லுபடியாகும் காலம் முழுக்க அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற எந்த தனியார் டெலிகாம் நிறுவனத்தின் எண்களுக்கு வேண்டுமானாலும் இந்த அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த BSNL 87 Plan அதன் பயனர்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் கூடுதல் இலவச நன்மையாக, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் இலவச காலர் டியூன் (free BSNL caller tune) நன்மையையும் வழங்குகிறது. இந்த பிஎஸ்என்எல் ரூ. 87 திட்டம் (BSNL Rs 87 Plan) 14 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (validity) உடன் வருகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 87 திட்டம் (BSNL Rs 87 Plan):
இந்த திட்டம் 87 ரூபாயில் இத்தனை நன்மைகளை வழங்கி இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கி அசத்தி வருகிறது.
100 ரூபாய்க்கும் குறைவான விலையில், போதுமான டேட்டா நன்மை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையை தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. உண்மையை சொல்ல போனால், உங்கள் பாக்கெட் பணத்தில் இருந்து அதிக பணத்தை செலவு செய்யாமல் இந்த திட்டத்தின் மூலம் உங்கள் தொடர்புகளுடன் நீங்கள் இணைந்திருக்க BSNL அனுமதிக்கிறது.
தினசரி வெறும் 6 ரூபாய் செலவு தானா?
இந்த பிஎஸ்என்எல் ரூ. 87 திட்டம் (BSNL Rs 87 Plan) உங்களுக்கு வெறும் ரூ.6.21 தினசரி கட்டணத்துடன் சேவையை வழங்குகிறது. இந்த திட்டத்தை ஒரு மாதத்தில் நீங்கள் இரண்டு முறை கூட ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். அல்லது உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து, உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை ஆக்டிவேட் செய்து, தொடர்புகளுடன் இணைந்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications








