Home
News

பொசுக்குனு போட்ட BSNL.. வெறும் ரூ.87 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1 ஜிபி டேட்டா.. இதுக்கு கம்மி இல்ல!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, வெறும் ரூ.87 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினசரி டேட்டா (Daily Data) சலுகையை கொடுத்துள்ளது. இதேபோல எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் கொடுக்காத விலையில் ரூ.97 மற்றும் ரூ.99 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டங்களையும் வைத்திருக்கிறது. இந்த திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவில் ரூ.100-க்கும் கீழ் திட்டங்கள் கிடையாது. சொல்லப்போனால், டேட்டா வவுச்சர்கள் மட்டுமே இந்த விலைக்குள் கிடைக்கின்றன. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம், இந்த விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவை கொடுத்து சிம் ஆக்டிவை வழங்குகிறது.

பொசுக்குனு போட்ட BSNL.. வெறும் ரூ.87 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

பிஎஸ்என்எல் ரூ 87 திட்ட விவரங்கள் (BSNL Rs 87 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Prepaid Plan) தினசரி டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. ஆகவே, இந்த மலிவு விலை திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை கிடைக்கிறது.

இந்த வாய்ஸ் கால்களுக்கு அடுத்தப்படியான நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா (Fair Usage Policy Data) வருகிறது. ஆகவே, தினசரி டேட்டா முடிந்த பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடையாது.

இருப்பினும், இந்த ரூ.87 விலைக்கு அதிகப்படியான சலுகைகளையே கொடுத்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 14 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் சிம் ஆக்டிவ் கிடைக்கும். வேறு திட்டங்கள் தேவைப்படாது. இதைவிட அதிக டேட்டா சலுகை வேண்டுமானால், ரூ.97 விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம்.

பிஎஸ்என்எல் ரூ 97 திட்ட விவரங்கள் (BSNL Rs 97 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல தினசரி டேட்டாவும் கிடைக்கிறது. ஆனால், கூடுதல் டேட்டாவை இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ள முடியும்.

அதாவது, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் உங்களுக்கு கொடுக்கிறது. இதுபோக 40 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டாவையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகை போக லோக்தூன் கன்டென்ட் (Lokdhun Content) சலுகையைும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இந்த திட்டத்தில் 15 நாட்கள் வேலிடிட்டியை பெறலாம்.

ஆகவே, 30 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். ஒருவேளை டேட்டா சலுகை வேண்டாம், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவ் சலுகை மட்டுமே போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு பின்வரும் ப்ரீபெய்ட் திட்டம் சரியாக இருக்கும். இந்த திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

பிஎஸ்என்எல் ரூ 99 திட்ட விவரங்கள் (BSNL Rs 99 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் சலுகை மட்டுமே கிடைக்கிறது. எஸ்எம்எஸ் அல்லது டேட்டா சலுகைகள் கிடைக்காது. ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை மட்டுமே செய்து கொள்ள முடியும். சிம் ஆக்டிவ் கிடைக்கும். இந்த திட்டத்துக்கு 20 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 87 Plan With 14 Days Validity Unlimited Voice Calling 1GB Daily Data Check Cheapest Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X