அடிச்சு பேசும் BSNL.. வெறும் ரூ.799 போதும்.. ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் டேட்டா.. வாய்ஸ் கால்கள்!
டெலிகாம் மார்கெட்டில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் பிராட்பேண்ட் திட்டங்களில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனங்கள் போட்டிப்போட்டு கொண்டு சலுகைகளை கொடுக்கின்றன. வெறும் ரூ.799 விலையிலான திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் மட்டுமட்டாமல் ஓடிடி சலுகையும் கிடைக்கிறது.
ஜியோ ரூ 699 திட்ட விவரங்கள் (Jio Rs 699 Plan Details): ஜியோ பிராட்பேண்ட் திட்டங்களில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இந்த திட்டம் மட்டுமே இருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், டேட்டா மட்டுமல்லாமல் வாய்ஸ் கால் சலுகையையும் பெற்று கொள்ள முடியும்.

ஆகவே, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அதிகபட்சமாக 3.3 டிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதோடு ஃபிக்ஸ்ட்-லைன் வாய்ஸ் காலிங் கனெக்சன் (Fixed-line Voice Calling Connection) வழங்கப்படுகிறது. இதக்கான டிவைஸ்கள் வாடிக்கையாளர்களிடம் இருக்க வேண்டும். இந்த திட்டம் மூன்று, ஆறு அல்லது 12 மாதங்கள் வேலிடிட்டியோடு மட்டுமே கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 799 திட்ட விவரங்கள் (Airtel Rs 799 Plan Details): இதுவொரு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் (Airtel Xstream Fiber) திட்டமாகும். இந்த திட்டத்திலும் டேட்டாவோடு சேர்த்து ஃபிக்ஸ்ட்-லைன் வாய்ஸ் காலிங் கனெக்சன் வழங்கப்படுகிறது. அதோடு ஓடிடி (OTT) சலுகையும் கிடைக்கிறது.
இந்த பிராட்பேண்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அதிகபட்சமாக 3.3 டிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதோடு எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Xstream Play), அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் ஜியோவை விட ரூ.100 கூடுதலாக இருப்பினும் ஓடிடி சலுகையை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ 799 திட்ட விவரங்கள் (BSNL Rs 799 Plan Details): இதுவொரு பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் (BSNL Bharat Fibre) திட்டமாகும். இந்த திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடி சலுகை வழங்கப்படுகிறது. ஆகவே, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கிறது.
மொத்தமாக 1000 ஜிபி டேட்டா வரையில் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த டேட்டாவை தினசரிக்கு கணக்கிட்டு பார்த்தால், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 33 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த 1000 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி நாட்களுக்குள்ளாக முழுவதும் பயன்படுத்தினாலும், அதன்பின்பு 5 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
ஆகவே, அன்லிமிடெட் டேட்டாவை இந்த திட்டம் வழங்குகிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்து கொள்ள ஏதுவாக லேண்ட்லைன் கனெக்சன் கொடுக்கப்படுகிறது.
இதற்கான டிவைஸ்களை வாடிக்கையாளர்கள் வைத்திருக்க வேண்டியது கட்டாயம். இல்லையென்றால், சலுகையை பெற முடியாது.
இந்த அனைத்து சலுகைகளும் போக வாடிக்கையாளர்களுக்கு 4 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜீ5 (ZEE5), சோனிலிவ் (SonyLIV) மற்றும் யூப்டிவி (YuppTV) ஆகிய ஆப்களை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த மூன்று திட்டங்களுக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
டெலிகாம் மார்கெட்டில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் பக்கா சலுகைகளை கொண்டிருப்பவை இந்த மூன்று திட்டங்கள் மட்டுமே. இதில் ஜியோ மற்றும் ஏர்டெல்லில் கூடுதலாக டேட்டா வேகம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அவற்றில் நல்ல ஓடிடி சலுகைகள் கிடையாது. அதேவேளையில், பிஎஸ்என்எல்லில் சற்று குறைவான டேட்டா வேகம் கிடைக்கிறது. இருப்பினும், முன்னணி ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications