Home
News

பிஎஸ்என்எல்லுக்கு கும்பிடு.. வெறும் ரூ.799 போதும்.. 150எம்பிபிஎஸ் வேகம்.. 5000 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் மூக்கில் விரல் வைக்கும்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டங்களில் நம்ப முடியாத சலுகைகள் கிடைக்கின்றன. நாளொன்றுக்கு ரூ.26 செலவில் 166 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளும்படியான சலுகைகள் வெறும் ரூ.799 மதிப்பிலான பிராட்பேண்ட் திட்டத்தில் (Broadband Plan) கிடைக்கிறது. அதேபோல ஒடிடி சலுகைகள் கொண்ட திட்டமும் மலிவான விலையில் கிடைக்கிறது. இந்த 2 பிராட்பேண்ட் திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ.799 திட்ட விவரங்கள் (BSNL Rs 799 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் ஓடிடி சலுகைகள் கிடையாது. ஆனால், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் (STD Voice Calls), 5 டிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகையை பெற்று கொள்ளலாம்.

பிஎஸ்என்எல்லுக்கு கும்பிடு.. வெறும் ரூ.799 போதும்.. 150 Mbps டேட்டா!

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 150 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு தினசரி லிமிட் கிடையாது. ஆனால், அதிகபட்சமாக 5000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 5000 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டாவின் கீழ் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.

அதாவது, 150 எம்பிபிஎஸ் டேட்டா வேகமானது, 10 எம்பிபிஎஸ் வேகத்துக்கு குறைக்கப்படும். இருப்பினும், வேலிடிட்டி நாட்கள் முழுவதும் டேட்டா கனெக்டிவிட்டியை பெற்று கொள்ளலாம். இதுபோக லேண்ட்லைன் மூலம் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் சலுகையை இந்த பிராட்பேண்ட் திட்டம் கொடுக்கிறது.

இருப்பினும், லேண்ட்லைன் டிவைஸ்களை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் முன்கூட்டியே வைத்திருக்க வேண்டும். இந்த பிராட்பேண்ட் திட்டத்துக்கு ஒரு மாதம் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும் நாளொன்றுக்கு ரூ.26 செலவில் 166 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ள முடிகிறது. ஓருவேளை ஓடிடி வேண்டுமானால், பின்வரும் திட்டத்தை பாருங்கள்.

பிஎஸ்என்எல் ரூ.999 திட்ட விவரங்கள் (BSNL Rs 999 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் அதிகப்படியான வேகம் மற்றும் டேட்டா சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி (OTT) சலுகைகளையும் பெற்று கொள்ளலாம். அதேபோல லேண்ட் லைன் வாய்ஸ் கால்கள் சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு 200 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதே வேகத்தில் முந்தைய திட்டத்தை போலவே 5000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 5 டிபி டேட்டாவுக்கு பிறகு டேட்டா வேகம் குறைக்கப்படும்.

அதாவது, ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 10 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். முந்தைய பிராட்பேண்ட் திட்டத்தைப் போலவே, இந்த திட்டத்திலும் லேண்ட்லைன் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது. அதேபோல லேண்ட்லைன் டிவைஸ்கள் ஏற்கனவே பிஎஸ்என்எல் கஸ்டமர்களிடம் இருக்க வேண்டும்.

இந்த சலுகைகள் போக ஓடிடி சலுகைள் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), லயன்ஸ் கேட் (Lions Gate), ஷீமரூமீ (ShemarooMe), ஹங்கமா (Hungama), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (Zee5), யூப்டிவி (YuppTV) மற்றும் எபிக்ஆன் (EpicOn) ஆகிய ஓடிடி தளங்களின் சந்தாவை பெற்று கொள்ளலாம்.

முன்பு, இந்த பிராட்பேண்ட் திட்டங்களின் டேட்டா மற்றும் வேகம் குறைவாக வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது கூடுதலாக கொடுக்கப்படுகின்றன. மலிவான விலையில் நல்ல டேட்டா சலுகை அல்லது ஓடிடி சலுகை கொண்ட பிராண்ட்பேண்ட் திட்டங்கள் வேண்டுமானால், இந்த 2 திட்டங்களையும் கஸ்டமர்கள் ஆப்ஷனில் எடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 799 Plan With Unlimited Calls, 4TB Data, 150Mbps Speed, Month Validity Check Best Broadband Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X