Home
News

பிஎஸ்என்எல் அறக்க பறக்குது.. வெறும் ரூ.799 போதும்.. 33GB டெய்லி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சந்தா!

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் குஷியாகும்படி வெறும் ரூ 799 விலை கொண்ட பிராட்பேண்ட் திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் சோனிலிவ் போன்ற மூன்றுக்கும் மேற்பட்ட ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படுகிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

டெலிகாம் (Telecom) வாடிக்கையாளர்களிடம் டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் பிரிக்க முடியாததாக மாறிவிட்டது. ஆகவே, டெலிகாம் நிறுவனங்கள் ஓடிடி சலுகைகளை பெரும்பாலான திட்டங்களில் வழங்க தொடங்கிவிட்டது. அந்த வரிசையில், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மிகவும் கம்மியான விலையில் 2 பிராட்பேண்ட் திட்டங்களை வைத்திருக்கிறது.

ரூ.799 போதும்.. 33GB டெய்லி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சந்தா!

பிஎஸ்என்எல் ரூ.799 திட்ட விவரங்கள் (BSNL Rs 799 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data), லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால் (Locla And STD Voice Call) சலுகைகள் மட்டுமல்லாமல், மூன்றுக்கும் மேற்பட்ட ஓடிடி (OTT) சலுகையும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 1000 ஜிபி டேட்டா வரையில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, நாளொன்றுக்கு 33 ஜிபிக்கும் அதிகமான டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த 1000 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி முடிவதற்குள் பயன்படுத்திவிட்டாலும், 5 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம்.

அதோடு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்குக்கும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடியும். ஆனால், அதற்கான லேண்ட்லைன் டிவைஸ்களை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வைத்திருக்க வேண்டும். இந்த சலுகைகள் போக உங்களுக்கு மூன்றுக்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது.

ரூ.799 போதும்.. 33GB டெய்லி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சந்தா!

ஆகவே, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) மற்றும் யூப்டிவி (YuppTV) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷனை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்தைவிட கூடுதல் டேட்டா , வேகம் மற்றும் ஓடிடி சலுகைகள் வேண்டும் என்றால், ரூ 999 விலையில் மற்றொரு பிராட்பேண்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.999 திட்ட விவரங்கள் (BSNL Rs 999 Plan Details): இந்த திட்டத்திலும் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடி சலுகைகள் கிடைக்கிறது. இந்த பிராட்பேண்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 150 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 2000 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.

இதை நாளொன்றுக்கு கணக்கிட்டு பார்த்தால், 66 ஜிபிக்கும் அதிகமான டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த 2000 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி முடிவதற்குள் பயன்படுத்தினால், ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 10 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படும். இதை மீதமுள்ள வேலிடிட்டி காலம் வரையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

முந்தைய திட்டத்தைப் போலவே, இந்த திட்டத்திலும் லேண்ட்லைன் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல லேண்ட்லைன் டிவைஸ்கள் வாடிக்கையாளர்களிடம் இருக்க வேண்டும். இந்த சலுகைகள் போக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், லயன்ஸ் கேட், ஷீமரூமீ, ஹங்கமா, சோனிலிவ், ஜீ5 மற்றும் யூப்டிவி ஆகிய ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது.

ரூ.799 போதும்.. 33GB டெய்லி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சந்தா!

இந்த 2 பிராட்பேண்ட் திட்டங்களுக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டங்களை பெறும்போது, அவற்றின் விலையோடு 18 சதவீதம் கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆன்லைன் கேமிங் மற்றும் ஓடிடி விரும்பிகளுக்கும், வொர்க் பிரம் ஹோம் அல்லது அதிகப்படியான டேட்டா சலுகை தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த 2 திட்டங்களும் நல்ல தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 799 Plan With 33GB Data, 100Mbps Speed Hotstar Subscription Check Broadband Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X