Home
News

பலே பாரத்.. வெறும் ரூ.799 போதும்.. 1000ஜிபி டேட்டா.. 100எம்பிபிஎஸ் வேகம்.. ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

பிஎஸ்என்எல்லின் ரூ 799 திட்டத்தில் 100எம்பிபிஎஸ் வேகத்தில் 1000ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டி கால்கள் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகைகளும் கிடைக்கிறது. இந்த திட்டத்துத்து 6 மாதம், 12 மாதம் மற்றும் 24 மாதம் வேலிடிட்டியும் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற எந்தவொரு டெலிகாம் நிறுவனங்களும் டேட்டா (Data) மற்றும் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனுக்கு (OTT) முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கவில்லை. டெலிகாம் வாடிக்கையாளர்களிடையே அதிகரிந்து வரும் ஓடிடி மோகத்துக்கு ஏற்ப ப்ரீபெய்ட் (Prepaid), போஸ்ட்பெய்ட் (Postpaind) மற்றும் ஃபைபர் (Fiber) திட்டங்களில் ஓடிடி சலுகைகளை கொண்டுவர தொடங்கிவிட்டன.

ரூ.799 போதும்.. 1000ஜிபி டேட்டா.. 100எம்பிபிஎஸ் வேகம்.. ஓடிடி சந்தா!

அதோடு டேட்டா சலுகையும் கூடுதலாகவே வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களில் ஃபைபர் திட்டங்களே நல்ல சலுகைகளை கொடுக்கின்றன. அவற்றில் ஓடிடி சலுகைகளுடன் வாய்ஸ் கால்கள், அதிவேக டேட்டா கொடுக்கப்படுகிறது. இதனால், லேண்ட்லைன் கனெக்சன் முதல் டிவி, லேப்டாப், மொபைல்களுக்கான டேட்டா வரையில் ஒரே திட்டத்தில் கிடைக்கிறது.

இந்த ஃபைபர் திட்டங்களில் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்கும் ரூ 799 திட்டத்தை (BSNL Rs 799 Plan) பற்றியே இப்போது பார்க்கப்போகிறோம். இதுவொரு பாரத் ஃபைபர் (Bharat Fiber) திட்டமாகும். 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைப்பதால், மொபைல் டேட்டாவை போலல்லாமல், அதிவேக இன்டர்நெட்டை பெற முடியும். இதில் கிடைக்கும் சலுகைகள் விவரம் பின்வருமாறு.

பிஎஸ்என்எல் ரூ 799 திட்ட விவரங்கள் (BSNL Rs 799 Plan Details): இந்த திட்டத்தின் மூலம் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த வேகத்தில் 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதன் பின்பு, ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 5 எம்பிபிஎஸ் வேகத்தில் வேலிட்டிட்டி காலம் முடியும் வரையில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படும்.

அதோடு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) கால்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு லேண்ட்லைன் டிவைஸ்கள் தேவைப்படும். இந்த சலுகைகள் போக, ஓடிடி (OTT) சலுகையும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆகவே, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (Zee5), யூப்டிவி (YuppTV) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இதற்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த திட்டத்தில் 6 மாத வேலிடிட்டி, 12 மாத வேலிடிட்டி மற்றும் 24 மாத வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் உங்களுக்கு 6 மாதத்துக்கு 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடி சலுகைகள் வேண்டும் என்றால், ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூ.4,794 செலுத்த வேண்டும்.

இதன் மூலம் உங்களுக்கு மாதத்துக்கு 1000 ஜிபி வீதம் 6 மாதத்துக்கு டேட்டா வழங்கப்படும். இந்த மாதாந்திர கணக்கீட்டை முடித்தாலும், 5 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். இதற்கு அடுத்தபடியாக 12 மாதங்களுக்கு வேலிடிட்டி வேண்டுமானால், ரூ. 9,588 செலுத்தி இந்த திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த வேலிடிட்டி திட்டத்தில் ஒரு மாதத்துக்கு இலவச சலுகைகள் வழங்கப்படுகிறது.

அதாவது, 12 மாத திட்டத்துக்கு 13 மாத சலுகைகள் கொடுக்கப்படும். ரூ.799 மதிப்பிலான சலுகைகளை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். முந்தைய திட்டத்தைப் போலவே இதிலும் டேட்டா, வாய்ஸ், ஓடிடி சலுகைகள் கிடைக்கும். இறுதியாக 24 மாத வேலிடிட்டி திட்டத்தை தேர்வு செய்தால், ரூ.19,176 செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தில் கூடுதலாக 3 மாதங்களுக்கு இலவச சலுகையை பெற்றுக் கொள்ள முடியும். அதாவது மாதத்துக்கு ரூ.799 மதிப்பிலான சலுகைகள் 3 மாதங்களுக்கு கொடுக்கப்படும். இந்த அனைத்து திட்டங்களும் எப்படி பார்த்தாலும், மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட நல்ல சலுகைகளையே வழங்குகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 799 Plan Offers Monthly Validity 100Mbps Data, Unlimited Calls, OTT Check Bharat Fibre Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X