BSNL தெளிவு தான்.. நேக்கா யோசித்து 300 நாளுக்கு 2GB டேட்டா.. ஆனா ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கு.. அது என்ன?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid plan) வழங்கி வருகிறது. இந்த வரிசையில், பிஎஸ்என்எல் நிறுவனம் சமிபத்தில் ஒரு புதிய திட்டத்தை 300 நாள் வேலிடிட்டியுடன், டேட்டா வாய்ஸ் கால், SMS போன்ற அனைத்தையும் வழங்கியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் சாமர்த்தியமாக யோசித்து அறிமுகம் செய்த புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தான் இந்த பிஎஸ்என்எல் ரூ. 797 திட்டம் (BSNL Rs 797 Plan). இந்த திட்டம் ரூ. 797 விலையில் பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இது, தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கும் டேட்டா நன்மையோடு வருகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 797 பிளான் (BSNL Rs 797 Plan):
இது வழக்கமான இலவச வாய்ஸ் கால்ஸ் நன்மைகளை வழங்குகிறது. இதில் லோக்கல் (Local) மற்றும் எஸ்டிடி (STD) அழைப்புகள் என்று இரண்டுமே அடங்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டம், 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த ஒட்டுமொத்த நன்மைகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் நேக்காக ஒரு கட்டுப்பாடை போட்டு வழங்கியுள்ளது. அது என்ன கட்டுப்பாடு? இந்த திட்டம் என்னென்ன நன்மைகளை எப்படி வழங்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்த பிஎஸ்என்எல் திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பிஎஸ்என்எல் நிறுவனம் வழக்கமான அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) நன்மைகளை வழங்குகிறது. இத்துடன், தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. ஆனால், உங்களுக்கு மொத்தமாக இந்த திட்டத்தின் மூலம் 120ஜிபி டேட்டா வரை மட்டுமே கிடைக்கிறது.
ஆம், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 300 நாட்கள் என்றாலும் கூட, பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகளை வெறும் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்குகிறது. ஆனால், உங்கள் BSNL SIM கார்டு 300 நாட்களுக்கு ஆக்டிவ் நிலையில் வைக்கப்படும். இது தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சாமர்த்தியம் மக்களே.

நேக்கா யோசித்து 300 நாளுக்கு 2GB டேட்டா.. ஆனா ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கு:
இந்த 2 ஜிபி தினசரி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ள முடியும். இது தவிர இந்த திட்டத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கிறது. இதன் வழியாக பிஎஸ்என்எல் பயனர்கள், மொத்தமாக 6000 SMS நன்மைகளை பெறுகிறார்கள்.
இந்த மூன்று சலுகைகளும் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதன் பின்பு, இந்த திட்டத்தின் வேலிடிட்டி மட்டும் 300 நாட்களுக்கு செயல்பாட்டில் வைக்கப்படும். இதன் மூலம் உங்கள் சிம் கார்டு மிகவும் குறைந்த விலையில் 2 மாத முழு பயன்பாட்டிற்கு பிறகு, இன்கமிங் செயல்பாட்டுடன் இயக்கத்தில் வைக்கப்படும். முதல் 60 நாட்களுக்கு பிறகு நீங்கள் பயன்படுத்தும் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் SMS நன்மைகளுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்.
லோக்கல் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 1 ரூபாயும், எஸ்டிடி கால்களுக்கு 1.5 ரூபாயும் வசூலிக்கப்படும். அதேபோல லோக்கல் SMS நன்மைக்கு 80 பைசாவும், நேஷனல் SMS-களுக்கு 1.20 ரூபாயும், இன்டர்நேஷனல் எஸ்எம்எஸ்களுக்கு 6 ரூபாயும் வசூலிக்கப்படும். டேட்டாவை பொறுத்தவரை 1 எம்பிக்கு 25 பைசா வசூலிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. எந்த சேவையையும் நீங்கள் 60 நாட்களுக்கு பிறகு பயன்படுத்தவில்லை என்றால், உங்கள் சிம் கூடுதல் கட்டணம் எதுவுமின்றி ஆக்டிவ் நிலையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








