Home
News

BSNL தான் இனி கிங்கு.. 10 மாசம் வேலிடிட்டி.. தினமும் ரூ.4 கூட செலவில்லை.. ஒரே ரீசார்ஜ்.. எந்த விலை திட்டம்?

யாருக்கு லக் அடித்ததோ இல்லையோ, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) பயனர்களுக்கு ஜாக்பாட்டே அடித்துள்ளது என்று நாம் கூறலாம். அந்த அளவிற்கு, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களே வியப்படையும் வகையில், BSNL நிறுவனம் இப்போது ஒரு அட்டகாசமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தினசரி ரூ. 10 கூட செலவில்லாமல், மொத்தமாக 10 மாதங்களுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா மற்றும் SMS என்று எல்லாவற்றையும் வழங்குகிறது. இத்திட்டத்தின் முழு விபரம் இதோ.

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் பல புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களை (BSNL Prepaid Plan) வழங்கி மக்கள் தன் வசம் ஈர்த்து வருகிறது. தினமும் வெறும் 3 ரூபாய் செலவில் 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட புதிய ரீசார்ஜ் திட்டத்தை BSNL தற்போது அறிமுகம் செய்துள்ளது. 300 நாட்கள் என்று குறிப்பிடுகையில், இந்த திட்டம் முழுவதுமாக 10 மாதங்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது.

BSNL தான் இனி கிங்கு.. 10 மாசம் வேலிடிட்டி.. தினமும் ரூ.4 கூட செலவில்ல

BSNL தான் இனி கிங்கு.. 10 மாசம் வேலிடிட்டி.. தினமும் ரூ.4 கூட செலவில்லை:

தினமும் வெறும் 3 ரூபாய் செலவில் 300 நாட்களுக்கு வேலிடிட்டியா? என்று சிலர் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பலாம். உண்மையிலேயே பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது இந்த திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இந்தியா முழுக்க பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவையை விரிவுபடுத்தி வரும் நிலையில், மலிவு விலையில் நீண்ட கால திட்டத்தை தேடுபவர்களுக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

இந்த திட்டத்துடன் வெறும் வேலிடிட்டி மட்டுமில்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளையும் வழங்கி அசத்தியுள்ளது பிஎஸ்என்எல். சரி, இப்போது இந்த திட்டத்தின் விலை என்ன? இதன் நன்மைகள் என்னென்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் திட்டமானது பிஎஸ்என்எல் ரூ. 797 திட்டம் (BSNL Rs 797 Plan) என்ற பெயருடன் வருகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 797 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 797 Prepaid Plan):

இந்த திட்டம் உங்களுக்கு 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் (300 days validity plan) நீண்ட நாள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் முதல் 60 நாள் காலத்திற்கு நீங்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited voice calls) நன்மையை எந்தவித தடையுமின்றி அனுபவிக்க முடியும். இந்த திட்டம் முதல் 60 நாட்களுக்கு தினமும் 2GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல், இதில் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் இலவச நேஷனல் ரோமிங் சேவையுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ஸ் கால்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் முதல் 60 நாட்களுக்கு கிடைக்கும். அடுத்த 240 நாட்களுக்கு உங்களுடைய பிஎஸ்என்எல் சிம் கார்டு ஆக்டிவேட் நிலையில் வைக்கப்படும். அதாவது, உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM Card) நிலை ஆக்டிவேட் நிலையில் இருக்கும். மொத்தமாக 300 நாட்களுக்கு உங்களுக்கு இன்கமிங் அழைப்புகளுக்கான அணுகல் கிடைக்கிறது.

இதன் மூலம் நீங்கள் தொடர்பில் இருப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது. மினிமம் பிஎஸ்என்எல் டாப் அப் திட்டங்களை ரீசார்ஜ் செய்து, மிஸ்டு கால் கொடுத்தும் நீங்கள் மற்றவர்களுடன் இணைப்பில் இருக்க முடியும். கூடுதல் டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளுக்கு நீங்கள் பிஎஸ்என்எல் டாப் அப் (BSNL Top Up) மற்றும் பிஎஸ்என்எல் டேட்டா வவுச்சர்களை (BSNL Data Voucher) பயன்படுத்தலாம். குறைந்த விலையில் நீண்ட நாள் வேலிடிட்டியை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த திட்டம் சிறந்தது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 797 Prepaid Plan With 10 Months or 300 Days Validity Provides Unlimited Calls 2GB Data and SMS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X