Home
News

கம்மி விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டம்.!

தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்றும் 4ஜி சேவையை வழங்கவில்லை.

இருந்தபோதிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்துவிடும். அதேபோல் அடுத்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது கம்மி விலையில் ஒரு வருடம் வேலிடிட்டி தரும் ஒரு அற்புதமான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தைப் பார்ப்போம்.

கம்மி விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. ஆனால் மேலே கூறப்பட்டுள்ள இந்த சலுகைகள் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். குறிப்பாக 60 நாட்களுக்குப் பிறகு இந்த சலுகைகள் காலாவதியாகிவிடும்.

ஆனாலும் இந்த ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை தேர்வு செய்தால் நீண்ட நாட்கள் பிஎஸ்என்எல் சிம் செயலில் இருக்கும். குறிப்பாக தனியார் டெலிகாம் நிறுவனங்கள் இதுபோன்ற ஒரு திட்டத்தை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

கம்மி விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், அழைப்பு நன்மைகள், இலவச PRBT உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40kbps ஆக குறையும். இதுதவிர Arena மொபைல் கேமிங் சேவையையும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

கம்மி விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பிரபலமான திட்டம் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை ஆகிய அனைத்து நன்மைகளும் உள்ளது.. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இத்துடன் கூடுதல் நன்மைகளாக M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவையின் கூடுதல் நன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கம்மி விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டம்

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் கூடிய விரைவில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை அதிகரித்துள்ளது. கூடிய விரைவில் ஜியோ, வோடபோன் நிறுவனங்களும் திட்டங்களின் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 797 prepaid plan offers more benefits with 365 days validity: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X