BSNL அதிரடி.. தினமும் ரூ.2 போதும்.. 300 நாளுக்கு டேட்டா, வாய்ஸ், SMS எல்லாம் உண்டு.. எந்த பிளான்? என்ன நன்மை?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது தினசரி வெறும் 2 ரூபாய் மதிப்பிலான கட்டணத்துடன் 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (BSNL 300 days validity prepaid plan) திட்டத்தை வழங்க துவங்கியுள்ளது. வெறும் 2 ரூபாய் தினசரி கட்டணத்துடன் வாய்ஸ் கால்ஸ், தினசரி டேட்டா, தினசரி SMS நன்மைகளை இந்த திட்டம் வழங்கி அசத்துகிறது. ஆனால், இது ஒரு சிறிய சூட்சமத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் கடைபிடித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. அது என்ன என்ற விபரம் இங்கே.
இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் திட்டத்தின் (BSNL prepaid plan) கீழ் வழங்கும் புதிய திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 797 பிளான் (BSNL Rs 797 Plan) திட்டமாகும். இந்த திட்டம் அதிக BSNL வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கிறது. இந்த திட்டம் 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை (300 days validity plan) கொண்டுள்ளது.

BSNL அதிரடி.. தினமும் ரூ.2 போதும்.. 300 நாளுக்கு டேட்டா, வாய்ஸ், SMS எல்லாம் உண்டு:
இந்த திட்டம் சரியாக 10 மாதங்கள் (BSNL 10 month validity plan) வரை முழுமையாக செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. மலிவு விலையில் ஒரு நீண்ட நாள் திட்டத்தை தேடும் நபர்களுக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. அதேபோல், பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM card) இரண்டாம் நிலை சிம் (Secondary SIM) ஆக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த திட்டம் பெஸ்ட் தேர்வாக அமைகிறது.
இந்த பிஎஸ்என்எல் 797 பிளான் (BSNL 797 Plan) நன்மைகளை பற்றி பேசுகையில், இது தினசரி டேட்டா (data) நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளை வழங்குகிறது. ஆனால், இந்த நன்மைகளை வழங்கும் முறையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு சிறிய சூட்சமத்தை பின்பற்றியுள்ளது என்பதை அனைத்து வாடிக்கையாளர்களும் கவனிக்க வேண்டும்.
பிஎஸ்என்எல் ரூ. 797 பிளான் (BSNL Rs 797 Plan):
பிஎஸ்என்எல் ரூ. 797 பிளான் (BSNL Rs 797 Plan) ரீசார்ஜ் திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் முதல் 60 நாட்களுக்கு பயன்படுத்த கிடைக்கும். உங்கள் சிம் கார்டு வேலிடிட்டி மட்டும் 300 நாட்களுக்கு தடையில்லாமல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் 60 நாளில் உங்களுக்கு தினசரி 2GB டேட்டா நன்மை கிடைக்கிறது.
தினசரி டேட்டா வரம்பிற்கு பிறகு, அன்லிமிடெட் டேட்டா நன்மை அடுத்த 240 நாட்களுக்கு 40Kbps வேகத்தில் (40Kbps unlimited data) வழங்கப்படும் என்று BSNL தகவல் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், முதல் 60 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளும் இந்த திட்டத்துடன் பயன்படுத்த கிடைக்கிறது.
மொத்தமாக 300 நாட்களுக்கு உங்களுக்கு இன்கமிங் அழைப்புகள் மற்றும் BSNL சிம் கார்ட் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு வெறும் 2 ரூபாய் என்ற தினசரி கட்டணத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்த திட்டம் தினசரி 2 ரூபாய் 6 பைசா என்ற கட்டணத்தை வசூலிக்கிறது. இந்திய தொலைத்தொடர்பு வட்டங்களில் இதை விட மலிவான திட்டத்தை நீங்கள் வாங்கவே முடியாது.


Click it and Unblock the Notifications








