Home
News

BSNL விஸ்வரூபம்.. மாதம் ரூ.80 போதும்.. 300 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2GB டேட்டா!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கனவிலும் நினைக்காத பட்ஜெட்டில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் மட்டுமல்லாமல், 300 நாட்கள் வேலிடிட்டியை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்குகிறது. இதேபோல 150 நாட்கள் திட்டத்தையும் கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 699 திட்ட விவரங்கள் (BSNL Rs 699 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் மட்டுமல்லாமல், 150 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஆகவே, 5 மாதங்களுக்கு சேவை கிடைக்கிறது.

BSNL விஸ்வரூபம்.. மாதம் ரூ.80 போதும்.. 300 நாட்கள் வேலிடிட்டி திட்டம்!

இந்த திட்டத்தை பெறும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகைகள் வருகின்றன. தினசரி 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தில் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 500 எம்பி டேட்டா சலுகை கிடைக்கிறது.

இந்த டேட்டாவுக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசி சலுகையின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவை வழங்கப்படுகிறது. மேலும், 60 நாட்களுக்கு பிஆர்பிடி (PRBT) சலுகை கிடைக்கிறது. டேட்டா குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, வாய்ஸ் கால் சலுகை மட்டும் 5 மாதங்களுக்கு வேண்டுமானால், இந்த திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ 797 திட்ட விவரங்கள் (BSNL Rs 797 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களே நம்ப முடியாத வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு 300 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

BSNL விஸ்வரூபம்.. மாதம் ரூ.80 போதும்.. 300 நாட்கள் வேலிடிட்டி திட்டம்!

அதாவது, கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் இந்த திட்டத்தின் வேலிடிட்டியை பயன்படுத்தலாம். இவ்வளவு நாள் வேலிடிட்டி வருவதால், அதில் சில சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. மொத்தமாக 6000 எஸ்எம்எஸ்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை பயன்படுத்த முடியும். மொத்தமாக 120 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகு முந்தைய திட்டத்தை போலவே 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கும்.

இந்த வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதன் பிறகு திட்டத்தின் வேலிடிட்டி மட்டும் 300 நாட்களுக்கு வழங்கப்படும். சொல்லப்போனால், சிம் ஆக்டிவ் 10 மாதங்களுக்கு நீடிக்கும். இந்த 60 நாட்களுக்கு பிறகு பயன்படுத்தும் சேவைகளுக்கு கட்டணங்கள் இருக்கின்றன.

முதல் 60 நாட்களுக்கு பிறகு வாடிக்கையாளர்கள் லோக்கல் வாய்ஸ் கால்களுக்கு நிமிடத்துக்கு 1 ரூபாய் செலுத்த வேண்டும். அதேபோல எஸ்டிடி வாய்ஸ் கால்களுக்கு 1.5 ரூபாய் செலுத்த வேண்டும். 1 எம்பி டேட்டாவுக்கு 25 பைசா வசூலிக்கப்படும். இதுபோக லோக்கல் எஸ்எம்எஸ்களுக்கு 80 பைசா வசூலிக்கப்படும்.

அதுவே நேஷனல் எஸ்எம்எஸ்களாக இருந்தால் 1.20 ரூபாயும், இன்டர்நேஷனல் எஸ்எம்எஸ்களாக இருந்தால் 6 ரூபாயும் செலுத்த வேண்டி இருக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு மாத செலவை பார்த்தால், ரூ.80 மட்டுமே. மலிவான விலையில் 300 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் திட்டம் வேண்டுமானால், இந்த திட்டம் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 797 Plan With Unlimited Voice Calls, 2GB Data 300 Days Validity Check 10 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X