வெளுத்து விட்ட பிஎஸ்என்எல்.. ரூ.797-க்கு முடிச்சாச்சு.. 300 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 2GB டேட்டா!
இதுக்கு இலவசமாகவே கொடுத்துட்டு போகலாம் போலயே என்று சொல்லும் அளவுக்கு வெறும் ரூ.797 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) 300 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுத்து இருக்கிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். அடிமட்ட விலையில் 10 மாதங்களுக்கு சிம் கார்டு ஆக்டிவாக இருக்க இந்த ப்ரீபெய்ட் திட்டத்தைவிட்டால் வேறு கிடையாது. இந்த விலைக்கு எப்படி திட்டம் கிடைக்கிறது? முழு சலுகைகள் எப்படி? உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharati Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி நிறுவனங்கள், என்னதான் திட்டங்களை வைத்திருந்தால், பெரும்பாலான டெலிகாம் (Telecom) கஸ்டமர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் தட்டித்தூக்குகிறது. நம்ப முடியாத விலைக்கு திட்டங்கள் கிடைப்பதால், அந்த சிம் கார்டையும் வாங்கி வைக்க தொடங்கிவிட்டர்.

ஏனென்றால், மற்ற நிறுவனங்களில் சிம் கார்டு ஆக்டிவாக இருக்கவே குறைந்தது ரூ.198 விலைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதிலும், 300 நாட்களுக்கு சிம் ஆக்டிவாக இருக்க வேண்டுமானால், ரூ.1500-க்கும் மேல் செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் வெறும் ரூ.797 மதிப்பில் அதை கொடுக்கிறது. மேலும், அன்லிமிடெட் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 797 திட்ட விவரங்கள் (BSNL Rs 797 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், இந்த மூன்று சலுகைகளை திட்டத்தின் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும்.
அதாவது, இந்த திட்டத்துக்கு 300 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த வேலிடிட்டி சிம் ஆக்டிவுக்கு (SIM Active) பொருந்தும். ஆனால், சலுகைகள் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். அதன்பிறகு இன்-கம்மிங் எஸ்எம்எஸ்கள் மற்றும் வாய்ஸ் கால்கள் மட்டுமே கிடைக்கும். இந்த 60 நாட்களில் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்கள் எப்படி கிடைக்கிறது?
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முதல் 60 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகைகள் வருகின்றன. அதேபோல 2 மாதங்களுக்கு
நாள்தோறும் 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, 60 நாட்களில் மொத்தமாக 120 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஃபேர் யூசேஸ் பாலிசி (Fair Usage Policy) உள்ளது.
இந்த சலுகை மூலம் 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த போஸ்ட் டேட்டா சலுகையும் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, 60 நாட்களிலும் தினமும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும். இந்த சலுகைகளுக்கு பிறகு வேறு கிடையாது.
ஆகவே, 300 நாட்களில் மீதமுள்ள 240 நாட்களில் சிம் ஆக்டிவ் மட்டுமே கிடைக்கும். இந்த நாட்களில் சலுகைகள் வேண்டுமானால், தேவைக்கு ஏற்ப பேஸ் திட்டம் இல்லாமலேயே கிடைக்கும் டேட்டா மற்றும் வாய்ஸ் வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆகவே, இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் சிம் ஆக்டிவ் மற்றும் பேஸ் திட்டத்துக்கு (Base Plan) பக்காவான தேர்வாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








