Home
News

BSNL கொடுத்தா கூரை பிச்சிக்கும்.. மாதாந்திரம் ரூ.79 போதும்.. 300 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்!

டெலிகாம் கட்டணங்கள் அதிகரித்ததில் இருந்து மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு லட்சம் லட்சமாக கஸ்டமர்கள் மாறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பிஎஸ்என்எல்லின் திட்டங்கள் மூக்கில் விரல் வைக்கும்படி அடிமட்ட விலைக்கு கிடைப்பதுதான். இப்போது கூட மாதத்துக்கு வெறும் ரூ.79 செலவில் 300 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி டேட்டா கொடுக்கும் திட்டத்தை பற்றியே பார்க்க போகிறோம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது?

இப்போதைக்கு பிஎஸ்என்எல் திட்டத்தின் மீதான ஆர்வம் டெலிகாம் கஸ்டமர்களிடையே குறைவதாக தெரியவில்லை. அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களையும் அலசி ஆராய்ந்து வருகின்றனர். மற்ற நிறுவனங்களை போலல்லாமல், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது திட்டங்களில் பல்வேறு சலுகைகள் மற்றும் வித்தியாசங்களை கொண்டிருக்கிறது. இப்போது பார்க்க போகும் திட்டமும் அப்படித்தான்.

BSNL கொடுத்தா கூரை பிச்சிக்கும்.. மாதம் ரூ.79 போதும்.. 10 மாதம் சேவை!

பிஎஸ்என்எல் ரூ 797 திட்ட விவரங்கள் (BSNL Rs 797 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Prepaid Plan) நம்ப முடியாத வகையில் 300 நாட்களுக்கு சர்வீஸ் வேலிடிட்டி கிடைக்கிறது. அதே நேரத்தில் தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற முக்கிய சலுகைகள் அனைத்தும் கொடுக்கப்படுகிறது.

இருப்பினும், அடிமட்ட விலைக்கு வேலிடிட்டி வருவதால், சலுகைகளில் கட்டுப்பாடுகள் வருகின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் வருகிறது. அதேபோல 2 ஜிபி டேட்டாவை (2GB Data) தினமும் பயன்படுத்தி கொள்ளலாம்.

மொத்தமாக 120 ஜிபி டேட்டா கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த 2 ஜிபிக்கு பிறகும் ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) சலுகையின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.

மேற்கண்ட 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை மூன்றும் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆகவே, மீதமுள்ள நாட்களுக்கு சிம் கார்டு மட்டும் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும். இன்கம்மிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மீதமுள்ள 240 நாட்களுக்கு பெற்று கொள்ளலாம்.

இவ்வளவு நாட்கள் சிம் கார்டு ஆக்டிவ் சலுகை இந்த விலைக்கு கிடைப்பது மற்ற நிறுவனங்களில் சாத்தியமில்லை. ஆனால், பிஎஸ்என்எல்லில் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு மாதம் செலவாகும் தொகையானது வெறும் ரூ 79ஆக மட்டுமே இருக்கிறது. ஒருவேளை மலிவான விலையில் அதிக வேலிடிட்டி மட்டுமல்லாமல் கூடவே சலுகைகளும் வேண்டுமானால், பின்வரும் திட்டம் சரியாக இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ 1198 திட்ட விவரங்கள் (BSNL Rs 1198 Plan Details): இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் 365 நாட்களுக்கும் சலுகைகள் கிடைக்கிறது. மிகவும் மலிவான விலையில் வருடம் முழுவதும் சலுகை கொண்ட திட்டங்களில் இதை அடித்து கொள்ள முடியாது. ஏனென்றால், 12 மாதங்களுக்கும் மாதாமாதம் சலுகைகள் பிரித்து கொடுக்கப்படுகிறது.

அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு ஒரு மாதத்துக்கு 300 நிமிடங்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3 ஜிபி டேட்டா மற்றும் 30 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதேபோல 12 மாதங்களுக்கும் சலுகைகள் பிரித்து கொடுக்கப்படும். ஆகவே, வருடம் முழுவதும் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் இருக்கும்.

ஒருவேளை மாதத்துக்கு கொடுக்கப்படும் சலுகைகளை அடுத்த மாதத்துக்கு முன்பாகவே முழுவதும் பயன்படுத்திவிட்டால், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆகவே, வாய்ஸ் கால்களுக்கு நிமிடத்துக்கு 1 ரூபாய் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்ப 80 பைசா வசூலிக்கப்படும். அடுத்த மாதம் வந்த உடன் திட்டத்தின் சலுகைகள் மீண்டும் கிடைத்துவிடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 797 Plan With 300 Days Validity Unlimited Voice Calls 2GB Data Check Cheapest Yearly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X