BSNL-க்கு பெரிய மனசு தான்.. தினசரி 3 ரூபாய் 300 நாள் செல்லுபடி.. கூட்டம் கூட்டமா ரீசார்ஜ்.. எந்த திட்டம்?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் தற்போது இந்தியாவில் மிகமிக குறைந்த விலையில் நம்ப முடியாத நீண்ட நாள் வேலிடிட்டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தினசரி வெறும் 3 ரூபாய்க்கும் குறைவான செலவில், 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை என்ன? மற்றும் இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் 3 ரூபாய்க்கும் குறைந்த தினசரி கட்டணத்துடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உண்மையாகவே இந்த திட்டம் ஒரு நாளுக்கு ரூ. 3 என்ற மலிவான கட்டணத்தை தான் வசூலிக்கிறதா? இந்த புதிய 300 நாள் வேலிடிட்டி கொண்ட பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் (BSNL prepaid plan) யாருக்கெல்லாம் சிறந்தது? இதன் விலை என்ன என்ற விபரங்களை பார்க்கலாம். முதலில் இத்திட்டத்தின் விலை பற்றி பார்க்கலாம்.

BSNL டெலிகாம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது, பிஎஸ்என்எல் ரூ. 797 பிளான் (BSNL Rs 797 Plan) என்ற பெயருடன் வருகிறது. BSNL தளத்தில் இந்த திட்டம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் சரியாக 10 மாதங்கள் (BSNL 10 month validity plan) வரை முழுமையாக செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. ஆம், இது 300 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.
மலிவு விலையில் நீண்ட நாள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தை தேடும் நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது. பிஎஸ்என்எல் ரூ. 797 பிளான் (BSNL Rs 797 Plan): அதேபோல், பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM card) இரண்டாம் நிலை சிம் (Secondary SIM) ஆக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த திட்டம் சிறந்த தேர்வாக அமைகிறது.
இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி பேசுகையில், இது டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த நன்மைகள் அனைத்தும், பிஎஸ்என்எல் ரூ. 797 பிளான் (BSNL Rs 797 Plan) ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளில் இருந்து அடுத்த 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த முதல் 60 நாளில் உங்களுக்கு தினசரி 2GB டேட்டா நன்மை கிடைக்கிறது.
அதன் பிறகு, அன்லிமிடெட் டேட்டா நன்மை அடுத்த 240 நாட்களுக்கு 40Kbps வேகத்தில் (40Kbps unlimited data) வழங்கப்படும். முதல் 60 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளும் கிடைக்கிறது. மொத்தமாக 300 நாட்களுக்கு உங்களுக்கு இன்கமிங் அழைப்புகள் மற்றும் சிம் கார்ட் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை இந்த திட்டம் வழங்குகிறது.
இந்த திட்டம் குறைந்த விலையில் நீண்ட நாள் வேலிடிட்டியை தேடும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததாக அமைகிறது. நீங்கள் BSNL சிம் கார்டை இரண்டாம் நிலை சிம் கார்டாக பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், இந்த திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறலாம்.


Click it and Unblock the Notifications








