Home
News

வாவ்.. அதிரடி காட்டிய BSNL: தினமும் ரூ.3 செலவு.. 300 நாள் வேலிடிட்டி.. கால்ஸ், டேட்டா, SMS உடன் ஜமாய்க்கலாம்..

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்தியாவில் பெரிய பிரளயத்தையே உருவாக்கி வருகிறது. டெலிகாம் துறையில் நடக்கும் கடுமையான போட்டியில் இப்போது அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக புதிய வாடிக்கையாளர்களை பெற்று முன்னேறி வருகிறது. இந்த திடீர் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக திகழ்வது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் அதிக விலை ஏற்றம் தான் காரணம் என்பதே உண்மையாகும்.

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது மிக மிக மலிவு விலையில் அதிரடியாக பல புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் இதுவரை இந்தியாவில் எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் தரமுடியாத மிகமிக குறைந்த விலையில் BSNL இப்போது ஒரு நீண்ட நாள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்து மக்களை கவர்ந்து வருகிறது.

வாவ்.. அதிரடி காட்டிய BSNL: தினமும் ரூ.3 செலவு.. 300 நாள் வேலிடிட்டி..

கால்ஸ், டேட்டா, SMS உடன் தினமும் ரூ.3 செலவு.. 300 நாள் வேலிடிட்டியுடன் ஜமாய்க்கலாம்:

இந்த புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Prepaid Plan) தினமும் வெறும் 3 ரூபாய் செலவில் 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. 300 நாட்கள் என்று குறிப்பிடுகையில், இந்த திட்டம் முழுவதுமாக 10 மாதங்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் வெறும் வேலிடிட்டி மட்டுமில்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளையும் வழங்கி அசத்தியுள்ளது பிஎஸ்என்எல்.

பிஎஸ்என்எல் ரூ. 797 திட்டம் (BSNL Rs 797 Plan):

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் திட்டமானது பிஎஸ்என்எல் ரூ. 797 திட்டம் (BSNL Rs 797 Plan) என்ற பெயருடன் வருகிறது. இந்த திட்டம் உங்களுக்கு 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் (300 days validity plan) நீண்ட நாள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் முதல் 60 நாள் காலத்திற்கு நீங்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited voice calls) நன்மையை எந்தவித தடையுமின்றி அனுபவிக்க முடியும்.

இந்த திட்டம் முதல் 60 நாட்களுக்கு தினமும் 2GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல், இதில் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இலவச நேஷனல் ரோமிங் சேவையுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ஸ் கால்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் முதல் 60 நாட்களுக்கு கிடைக்கும். அடுத்த 240 நாட்களுக்கு உங்களுடைய பிஎஸ்என்எல் சிம் கார்டு ஆக்டிவேட் நிலையில் வைக்கப்படும்.

பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM Card):

அதாவது, உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM Card) நிலை ஆக்டிவேட் நிலையில் இருக்கும். மொத்தமாக 300 நாட்களுக்கு உங்களுக்கு இன்கமிங் அழைப்புகளுக்கான அணுகல் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் தொடர்பில் இருப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது. மினிமம் பிஎஸ்என்எல் டாப் அப் திட்டங்களை ரீசார்ஜ் செய்து, மிஸ்டு கால் கொடுத்தும் நீங்கள் மற்றவர்களுடன் இணைப்பில் இருக்க முடியும்.

கூடுதல் டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளுக்கு நீங்கள் பிஎஸ்என்எல் டாப் அப் (BSNL Top Up) மற்றும் பிஎஸ்என்எல் டேட்டா வவுச்சர்களை (BSNL Data Voucher) பயன்படுத்தலாம். குறைந்த விலையில் நீண்ட நாள் வேலிடிட்டியை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த திட்டம் சிறந்தது. பிஎஸ்என்எல் சிம் கார்டை இரண்டாம் நிலை கார்டாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 797 Plan With 300 Days Validity Enjoy Unlimited Voice Calls 2GB Daily Data 100 SMS For 60 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X