BSNL போட்டப்போடு.. மாதாந்திரம் ரூ.79 போதும்.. 300 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்ஸ்.. 2 ஜிபி டேட்டா!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharati Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டும்படி மத்திய அரசின் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு வரும் கஸ்டமர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது, பிஎஸ்என்எல்லுக்கு மாறிய கஸ்டமர்கள் அதன் திட்டங்களை பார்த்து திக்குமுக்காடி போய்விட்டனர் என்றே சொல்ல வேண்டும். மாதம் வெறும் ரூ.79 செலவில் 300 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தால், புதிய கஸ்டமர்களுக்கு வியப்பாகத்தானே இருக்கும்.
ஆம், உண்மைதான் பிஎஸ்என்எல் நிறுவனம் அப்படிவொரு திட்டத்தை வைத்திருக்கிறது. அதாவது, மாதத்துக்கு ரூ.79.7 வீதம் செலவு செய்தால், கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும்படி ரூ.797 மதிப்பிலான திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் கிடைக்கின்றன.

ஆனாலும், அடிமட்ட விலைக்கு திட்டம் இருப்பதால், அதில் விதிகளும் இருக்கின்றன. அதாவது, 300 நாட்கள் வேலிடிட்டி என்பது கட்டாயம் கிடைக்கும். ஆனால், வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வேலிடிட்டி முழுவதும் கிடைக்காது. குறிப்பட நாட்கள் வரையில் மட்டுமே அதை பயன்படுத்த முடியும். ஆகவே, முதலில் திட்டத்தை பற்றிய முழு விவரங்களை தெரிந்து பார்த்துவிடுவோம்.
பிஎஸ்என்எல் ரூ 797 திட்ட விவரங்கள் (BSNL Rs 797 Plan Details): இந்த பிஎஸ்என்எல் திட்டத்துக்கு முன்பே சொன்னது போல 300 நாட்கள் வேலிடிட்டி நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு சிம் கார்டு ஆக்டிவாக (SIM Card Active) இருக்கும். இன்கம்மிங் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை பெற்று கொள்ளலாம். அதேபோல முதல் 60 நாட்களுக்கு பல்வேறு சலுகைகள் வருகிறது.
அதாவது, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு வரும் முதல் 60 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பயன்படுத்தலாம். ஆகவே, தினசரிக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. 60 நாட்கள் வீதம் மொத்தமாக 120 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். 2 ஜிபிக்கு பிறகு ஃபேர் யூசேஸ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 40 கேபிபிஎஸ் வேக டேட்டா கிடைக்கிறது.
மேலும், முக்கிய சலுகையாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை பயன்படுத்தலாம். அதேபோல தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும். ஆகவே, 6000 எஸ்எம்எஸ்களை முதல் 60 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த சலுகைகள் முடிந்த பிறகு, அதாவது 60 நாட்களுக்கு பிறகு வேலிடிட்டி மட்டுமே கிடைக்கிறது.
ஆகவே, மற்ற சலுகைகளுக்கு கட்டணங்கள் இருக்கும். இன்கம்மிங் கால்கள் வந்தால் போதும் அல்லது அடிமட்ட விலையில் சிம் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு 300 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் இந்த ரூ 797 திட்டம் பக்காவான தேர்வாக இருக்கும். ஒருவேளை மலிவான விலையில் ஆண்டு முழுவதும் வாய்ஸ் கால்கள் மட்டும் வேண்டுமானால், ரூ 1499 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 336 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல 100 எஸ்எம்எஸ்கள் நாள்தோறும் கிடைக்கிறது. ஆனால், டேட்டா மட்டும் மொத்தமாகவே 24 ஜிபி மட்டுமே கிடைக்கிறது. வாய்ஸ் கால்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் பக்கா தேர்வாகும்.


Click it and Unblock the Notifications








