Home
News

இறங்கி அடித்த BSNL.. வெறும் ரூ.797-க்கு 300 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2GB டேட்டா!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் வாடிக்கையாளர்களே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.797 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் நம்ப முடியாத சலுகைகளை அள்ளிக் கொட்டி இருக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், நாள்தோறும் 2 ஜிபி டேட்டா சலுகைகளையும் கொடுக்கிறது. இந்த கம்மி விலைக்கு எப்படி 300 நாட்கள் வேலிடிட்டி கொடுக்க முடிகிறது? இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வேறு ஏதாவது செக் இருக்கிறதா? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்று 2 திட்டங்கள் இருக்கின்றன. அதாவது, ரூ.797 ப்ரீபெய்ட் திட்டத்தில் 300 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்றால், ரூ.397 மதிப்பிலான மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்திலும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வருகின்றன.

இறங்கி அடித்த BSNL.. வெறும் ரூ.797-க்கு 300 நாட்கள் வேலிடிட்டி வருது!

பிஎஸ்என்எல் ரூ 797 திட்ட விவரங்கள் (BSNL Rs 797 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) 300 நாட்கள் வேலிடிட்டி நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த வேலிடிட்டியை ஆக்டிவ் திட்டமாக எடுத்து கொள்ளலாம். ஏனென்றால், இந்த திட்டத்தின் வேலிடிட்டிக்கும் அதன் சலுகைகளுக்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, 120 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையும் கொடுக்கப்படுகிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஃபேர் யூசேஸ் பாலிசி (Fair Usage Policy) டேட்டாவும் கிடைக்கிறது. அதாவது, 2 ஜிபிக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை தொடர்ந்து கிடைக்கும். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையானது கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 6000 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த சலுகைகள் அனைத்தும் 300 நாட்கள் வேலிடிட்டியின் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். அதன்பிறகு ப்ரீபெய்ட் திட்டம் ஆக்டிவாக இருக்கும். ஆனால், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது. அதேபோல 60 நாட்களுக்கு மேல் பயன்படுத்தும் சலுகைகளுக்கு கட்டணங்களும் இருக்கிறது.

ஆகவே, ப்ரீபெய்ட் திட்டம் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு ஆக்டிவாக இருக்க வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இதைவிட கம்மியான பட்ஜெட்டில் இதேபோல அதிக நாட்கள் வேலிடிட்டி வேண்டுமானால், ரூ.397 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 397 திட்ட விவரங்கள் (BSNL Rs 397 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மொத்தமாக 60 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும்.

முந்தைய திட்டத்தை போலவே 40 கேபிபிஎஸ் வேகத்தில் 2 ஜிபிக்கு பிறகு போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த மூன்று சலுகைகளையும் முதல் 30 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதன்பிறகு 150 நாட்களுக்கு வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். ஆகவே, திட்டத்தை தொடர்ந்து ஆக்டிவில் வைத்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 797 Plan With 2GB Daily Data, Unlimited Voice Calls, 300 Days Validity Check 10 Month
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X