BSNL-க்கு கும்பிடு.. ரூ.797 போதும்.. 300 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் நிறுவனம், இப்படியெல்லாம் சலுகைகளை கொடுக்கிறதா? என்று மூக்கில் விரல் வைக்கும்படி ரூ.797 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்தில் 300 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா போன்ற சலுகைகளை வழங்குகிறது. ஆனால், இதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
பிஎஸ்என்எல் ரூ 797 திட்ட விவரங்கள் (BSNL Rs 797 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data), எஸ்எம்எஸ் (SMS) என்று அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. ஆனால், மிகவும் கம்மியான விலைக்கு 300 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருப்பதால், அந்த சலுகைகளில் சில கட்டுப்பாடுகள் வருகின்றன.

இந்த பிஎஸ்என்எல் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை கிடைக்கிறது. அதோடு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 120 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த 2 ஜிபி தினசரி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ள முடியும். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வீதம் 6000 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த மூன்று சலுகைகளும் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
அதன் பின்பு, ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) மட்டுமே 300 நாட்களுக்கு ஆக்டிவாக இருக்கும். ஆனால், மற்ற அனைத்து சலுகைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். ஆகவே, 60 நாட்களுக்கு பிறகு லோக்கல் கால்களுக்கு நிமிடத்துக்கு 1 ரூபாயும், எஸ்டிடி கால்களுக்கு 1.5 ரூபாயும் வசூலிக்கப்படும்.

அதேபோல லோக்கல் எஸ்எம்எஸ்களுக்கு 80 பைசாவும், நேஷனல் எஸ்எம்எஸ்களுக்கு 1.20 ரூபாயும், இன்டர்நேஷனல் எஸ்எம்எஸ்களுக்கு 6 ரூபாயும் வசூலிக்கப்படும். டேட்டாவை பொறுத்தவரை 1 எம்பிக்கு 25 பைசா செலுத்த வேண்டும். ப்ரீபெய்ட் திட்டம் ஆக்டிவாக இருந்தால் மட்டும் போதும் என்று கேட்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் நல்ல தேர்வாக இருக்கும்.
ஒருவேளை ஆண்டு முழுவதும் தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ 2399 திட்டத்தை கஸ்டமர்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த திட்டத்தில் அதிகப்படியான சலுகைகள் கிடைக்கின்றன. வேறெந்த திட்டமும் இந்த திட்டத்துக்கு பிறகு தேவைப்படாது. இப்போது, சலுகைகளை பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ 2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு வருடத்துக்கும் மேலாக மொத்தமாக 395 நாட்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் மற்றும் லோக்தூன், பிஆர்பிடி சலுகைகளையும் பெறலாம்.
ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு தினசரிக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, 395 நாட்களுக்கு 790 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகு டேட்டா வேகம் 40 கேபிபிஎஸ் வேகத்துக்கு குறைக்கப்படும். இருப்பினும் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
அதேபோல ஆண்டு முழுவதும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதுபோக திட்டத்தின் முதல் 30 நாட்களுக்கு லோக்தூன் (Lokdhun) சலுகையும், பிஆர்பிடி (PRBT) சலுகையும் கொடுக்கப்படுகிறது. மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் இந்த திட்டத்தின் கட்டணம் மிகவும் குறைவாகும்.


Click it and Unblock the Notifications








