Home
News

ஆட்டமே வேற.. நியூ BSNL பிளான்.. மாதத்துக்கு ரூ.131 போதும்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) வாடிக்கையாளர்களே மூக்கில் விரல் வைக்கும்படி மாதத்துக்கு வெறும் ரூ.131 செலவில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை உடன் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவனங்களின் வாடிக்கையாளர்களிடையே ஓடிடி மற்றும் ஆன்லைன் கேமிங் என்பது பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. இதனால், அந்தந்த நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் டேட்டா சலுகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

நியூ BSNL பிளான்.. மாதத்துக்கு ரூ.131 போதும்.. 180 நாட்கள் வேலிடிட்டி!

அந்த வரிசையில், பிஎஸ்என்எல் நிறுவனமும், இணைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இப்போது, 90 மற்றும் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய டேட்டா திட்டங்களை மலிவான விலைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில் 180 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை மாதத்துக்கு கணக்கீடு செய்து பார்த்தால், வெறும் ரூ.131 செலவில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 788 பிளான் விவரங்கள் (BSNL Rs 788 Plan Details): இந்த திட்டம் மூலம் டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. நாள்தோறும் தடையில்லா இன்டர்நெட் தேவைப்படும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் 6 மாதங்களுக்கு தடையில்லா டேட்டாவை வழங்குகிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாள்தோறும் 2 ஜிபி டேட்டா வீதம் 360 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த தினசரி டேட்டாவை முழுமையாக பயன்படுத்தி விட்டாலும், ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) மூலம் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தோடு ரூ 411 விலையில் மற்றொரு டேட்டா திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு தடையில்லா இன்டர்நெட் தேவைப்படும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் பலன்களை, இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ 411 பிளான் விவரங்கள் (BSNL Rs 411 Plan Details): இந்த டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் மொத்தமாக 180 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

முந்தைய திட்டத்தைப் போலவே, இந்த திட்டத்துக்கும் தினசரி டேட்டா முடிந்த பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசி மூலம் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா வழங்கப்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டியில் டேட்டா மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை வேண்டுமானால், ரூ.1999 விலையில் பெரும்பாலான சலுகைகளை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 1999 பிளான் விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) மட்டுமல்லாமல், ஓடிடி (OTT) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 600 ஜிபி டேட்டா மொத்தமாக வழங்கப்பட்டுவிடும்.

இந்த டேட்டாவுக்கு தினசரி வரம்பு கிடையாது. 1.5 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி என்று கணக்கீடு செய்து டேட்டாவை பயன்படுத்த வேண்டிய தேவை கிடையாது. இந்த பிளானின் வேலிடிட்டி வரை எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைப்பதால், ஒரு வருடம் முழுக்க எந்தவொரு ரீசார்ஜ் பற்றியும் கவலைப்படாமல் வாடிக்கையாளர்கள் இருக்கலாம். அதோடு ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் (Eros Now Entertainment) மற்றும் லோக்துன் கன்டென்ட் (Lokdhun Content) சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 788 Plan Comes With 180 Days Validity, 2GB Daily Data, 40 Kbps FUP Data Check Six Month Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X