Home
News

BSNL நெத்தியடி.. மாதத்துக்கு ரூ.131 போதும்.. 6 மாதங்கள் வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களின் வாடிக்கையாளர்களே மூக்கில் விரல் வைக்கும்படி மாதத்துக்கு வெறும் ரூ 131 செலவில் 180 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்குகிறது. இதுகுறித்த விவரம் இதோ.

பிஎஸ்என்எல் ரூ 788 பிளான் விவரங்கள் (BSNL Rs 788 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. ஓடிடி, ஆன்லைன் கேமிங் பிரியர்களுக்கு கம்மியான விலையில் பக்கா டேட்டா சலுகை வேண்டுமானால், இந்த ரூ 788 திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.

மாதத்துக்கு ரூ.131 போதும்..180 நாட்கள் வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா!

ஏனென்றால், இந்த திட்டத்தின் மாதாந்திர செலவை பார்த்தால் வெறும் ரூ 131 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 180 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. அதோடு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 360 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

இந்த டேட்டாவை வேலிடிட்டி முடியும் முன்பே முழுமையாக பயன்படுத்திவிட்டால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெற உங்களிடம் பேஸ் ஆக்டிவ் பிரீபெய்ட் திட்டம் ( (Base Active Prepaid Plan)) இருக்க வேண்டும். இதே சலுகைகள் வருடம் முழுவதும் வேண்டுமானால், ரூ 1515 மதிப்புள்ள டேட்டா திட்டத்தை தேர்வு செய்யலாம்.

பிஎஸ்என்எல் ரூ 1515 பிளான் விவரங்கள் (BSNL Rs 1515 Plan Details): இந்த திட்டத்திலும் டேட்டா சலுகை மட்டுமே வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி போன்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இந்த நாட்களில், உங்களுக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போலவே, இதிலும் ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 2 ஜிபி தினசரி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

மாதத்துக்கு ரூ.131 போதும்..180 நாட்கள் வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா!

இந்த திட்டத்துக்கும் பேஸ் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். டேட்டா மட்டும் போதாது, அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வேண்டும் என்றால், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ரூ 1999 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டமே பக்காவான தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ 1999 பிளான் விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி வருவதால், ஆண்டு முழுவதும் வேறு எந்தவொரு திட்டம் தேவைப்படாது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 600 ஜிபி லம்ப் சம் டேட்டா (Lump Sum Data) சலுகை கொடுக்கப்படுகிறது.

இதை ஒரு நாளுக்கு கணக்கிட்டு பார்த்தால், தினசரி 1.6 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இருப்பினும், இது லம்ப்-சம் டேட்டா என்பதால், தினசரி லிமிட் இல்லாமல், எவ்வளவு டேட்டாவை வேண்டுமாலும் பயன்படுத்தலாம். இந்த 600 ஜிபிக்கு பிறகு 80 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த சலுகைகள் போக திட்டத்தின் முதல் 30 நாட்களுக்கு ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் (Eros Now Entertainment) மற்றும் லோக்துன் கன்டென்ட் (Lokdhun Content) சப்ஸ்கிரிப்சனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை கணக்கிட்டால், ரூ 166 மட்டுமே தேவைப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 788 Plan Comes With 180 Days Validity, 2GB Daily Data, 40 Kbps FUP Check Six Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X