Home
News

இனி இந்த ரீசார்ஜில் 500GB-க்கு பதிலாக 1500GB.. BSNL-ன் அதிரடி அறிவிப்பு.. தீயா வேலை செய்யும் பிரவின் குமார்!

ஒட்டுமொத்த இந்தியாவும் முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்தையும், அதற்கான ஆடம்பர கொண்டாட்டங்களையும், அதற்காக செய்யப்பட்ட செலவுகளையும் உற்று கவனித்துக்கொண்டிருக்கும் வேளையில்.. அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, இந்திய டெலிகாம் துறையில் தனது அடுத்தகட்ட வளர்ச்சிக்கான ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

சில டெலிகாம் சர்க்கிள்களில் மட்டுமே கிடைத்த மிகவும் பிரபலமான பிராட்பேண்ட் திட்டத்தை மேலும் பல பகுதிகளில் அறிமுகம் செய்ததது மட்டுமின்றி, அந்த திட்டத்தின் கீழ் கிடைத்த டேட்டா நன்மையானது 3 மடங்காக அதிகரிக்கவும் பட்டுள்ளது. அதென்ன திட்டம்? அதன் கீழ் கிடைத்த பழைய நன்மை என்ன? தற்போது புதிய நன்மை நன்மை என்ன? இதோ விவரங்கள்:

இனி இந்த BSNL ரீசார்ஜில்.. 500GB-க்கு பதிலாக 1500GB!

என்ன திட்டம்? நாம் இங்கே பேசுவது 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிஎஸ்என்எல் ரூ.777 பிராட்பேண்ட் திட்டத்தை பற்றித்தான். முன்னதாக இந்த திட்டம் அந்தமான், நிக்கோபார் மற்றும் குஜராத் வட்டங்கள் உட்பட சில வட்டங்களில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைத்தது. இருப்பினும் தற்போது இது மேலும் சில வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஃபைபர்-டு-தி-ஹோம் (FTTH) சேவை பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் திட்டமானது 100எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் 500ஜிபி டேட்டாவை வழங்கி வந்தது. தற்போது இந்த பிராட்பேண்ட் திட்டமானது அதே எம்பிபிஎஸ் ஸ்பீடின் கீழ்1500ஜிபி டேட்டாவுடன் வருகிறது.

இனி இந்த BSNL ரீசார்ஜில்.. 500GB-க்கு பதிலாக 1500GB!

அதாவது ரூ.777 திட்டத்தின்கீழ் இனி 3 மடங்கு அதிக டேட்டா கிடைக்கும் மற்றும் 1500ஜிபி டேட்டா என்கிற லிமிட் தீர்ந்த பின்னர் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 5 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் இலவச ஓடிடி நன்மைகள் எதுவும் இருக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வழக்கமான மற்ற நன்மைகளை பொறுத்தவரை ரூ.777 பிராட்பேண்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச பிக்ஸடு-லைன் வாய்ஸ் காலிங் கனெக்ஷன் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து, 100எம்பிபிஎஸ் ஸ்பீடை வழங்கும் வேறு ஏதேனும் பிராட்பேண்ட் திட்டங்களை தேடினால்.. ரூ.799 மற்றும் ரூ.849 திட்டங்களை கருத்தில் கொள்ளாலாம்.

இனி இந்த BSNL ரீசார்ஜில்.. 500GB-க்கு பதிலாக 1500GB!

பிஎஸ்என்எல் ரூ.799 பிராட்பேண்ட் திட்டமானது 1000ஜிபி வரையிலான டேட்டாவுடன் வருகிறது. மேலும் ரூ.777-ஐ போல் இல்லாமல்.. இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) மற்றும் யப் டிவி (YuppTV) உள்ளிட்ட இலவச ஓடிடி சந்தாக்களையும் வழங்குகிறது.

மறுகையில் உள்ள ரூ.849 திட்டமானது 100எம்பிபிஎஸ் இண்டர்னட் ஸ்பீடின் கீழ் 3.3டிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தில் இலவச ஓடிடி நன்மைகள் எதுவும் கிடைக்காது. இருப்பினும், எப்யுபி (FUP) டேட்டா நுகர்வுக்கு பிறகு, மற்ற 100எம்பிபிஸ் திட்டங்களை போல 5எம்பிபிஸ்-க்கு பதிலாக 10எம்பிபிஎஸ் ஸ்பீடை வழங்கும்.

தற்போது ​​பிஎஸ்என்எல் நிறுவனமானது ஃபைபர் கனெக்ஷனிற்காக நுகர்வோரிடமிருந்து எந்த நிறுவல் கட்டணத்தையும் (Installation fee) வசூலிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் இறுதி (End of current financial year) வரை நிறுவல் கட்டணமான ரூ.500 தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான புதிய வாடிக்கையாளர்களை (New Customers) சேர்க்கவே பிஎஸ்என்எல் நிறுவனம், இதெல்லாம் செய்து வருகிறது. டிராய் (TRAI) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த டிசம்பர் 2023-ல், பிஎஸ்என்எல் நிறுவனம் 0.15 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 91.77 மில்லியனாக குறைந்துள்ளது. பிஎஸ்என்எல்-ஐ விட மோசமான நிலையில் வோடபோன் ஐடியா உள்ளது. இந்நிறுவனம் 1.36 மில்லியன் சந்தாதாரர்களை இழந்ததுள்ளது. இதன் விளைவாக விஐ-யின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 223.04 மில்லியனாக குறைந்துள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 777 Broadband Plan Now Offer 1500GB Data and Available in More Telecom Circles Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X