BSNL மீண்டும் அறிமுகம் செய்த 'அந்த' சூப்பர் பிளான்.! என்னென்ன நன்மைகள் தெரியுமா?

|

கொரோனா தொற்றுநோய் காரணமாக பலரும் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இதனால் இணைய சேவை பயன்பாடு என்பது நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக மக்கள் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருவதால் பிராட்பேண்ட் சேவைக்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் BSNL புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

BSNL ரூ.777 பிராட்பேண்ட் திட்டம்

BSNL ரூ.777 பிராட்பேண்ட் திட்டம்

BSNL நிறுவனம் தற்பொழுது ரூ.777 பிராட்பேண்ட் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் முதலில் 2018 இல் 500 GB CUL என்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 500 ஜிபி டேட்டாவை 50 Mbps வேகத்தில் வழங்குகிறது. டேட்டா லிமிட் முடிந்த பின்னர் இணைய வேகம் என்பது வெறும் 2 Mbps வேகத்திற்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 நான்கு புதிய பிராட்பேண்ட் திட்டங்கள்

நான்கு புதிய பிராட்பேண்ட் திட்டங்கள்

இந்த திட்டம் வரம்பற்ற அனைத்து நெட்வொர்க் அழைப்பு நன்மையை வழங்குகிறது. BSNL நிறுவனம் ரூ.449, ரூ.799, ரூ.999, மற்றும் ரூ. 1,499 விலைகளில் நான்கு புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்திய பின்னர் நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து ரூ.777 திட்டம் அகற்றப்பட்டது. ஆனால், தற்பொழுது மீண்டும் இத்திட்டம் பீகார் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய தகவல்.! மார்ஸ் ரேடாரில் சிக்கியது இதுதான்.!பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய தகவல்.! மார்ஸ் ரேடாரில் சிக்கியது இதுதான்.!

BSNL புதிய பிராட்பேண்ட் திட்டம்

BSNL புதிய பிராட்பேண்ட் திட்டம்

BSNL நிறுவனத்தின் முதல் பிராட்பேண்ட் திட்டமான ரூ.449 திட்டத்தில் 3.3TB டேட்டா 30 Mbps வேகத்துடன் கிடைக்கிறது. இந்த ரூ.449 திட்டமானது அந்தமான் & நிக்கோபார் தவிர அனைத்து வட்டங்களிலும் கிடைக்கிறது என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், ரூ.799 திட்டமானது 3.3TB டேட்டாவை 100 Mbps வேகத்தில் வழங்குகிறது.

சூப்பர் ஸ்டார் 500 மற்றும் சூப்பர் ஸ்டார் 300

சூப்பர் ஸ்டார் 500 மற்றும் சூப்பர் ஸ்டார் 300

BSNL நிறுவனத்தின் ரூ.999 திட்டமானது 3300 ஜிபி டேட்டாவை 200 Mbps வேகத்துடன் வழங்குகிறது. மேலும் டேட்டா லிமிட் முடிந்ததும் 2 Mbps ஆக வேகம் குறைக்கப்படுகிறது. அதேபோல், BSNL நிறுவனத்தின் ரூ.1,499 திட்டத்தின் படி வாடிக்கையாளர் சுமார் 4400 ஜிபி டேட்டாவை 300 Mbps வேகத்துடன் பெறுகிறார்கள். சூப்பர் ஸ்டார் 500 மற்றும் சூப்பர் ஸ்டார் 300 ஆகிய திட்டங்களுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் நன்மைகளையும் நிறுவனம் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs. 777 Broadband Plan Availablity Extended Until September 20 in Select Circles : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X