Home
News

ஒரே BSNL ரீசார்ஜ்.. 6 மாதங்களுக்கு கவலை இருக்காது.. அன்லிமிடெட் சலுகைகள்.. யாரு விடுவா?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் 6 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கும் வகையில் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அந்த திட்டத்தை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.750 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 750 Prepaid Plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்கள் ஆகும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஒரே BSNL ரீசார்ஜ்.. 6 மாதங்களுக்கு கவலை இருக்காது.. யாரு விடுவா?

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.750 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. ஆனால் பிஎஸ்என்எல் ரூ.750 ப்ரீபெய்ட் திட்டம் GP-II கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த 6 மாத வேலிடிட்டி கொண்ட திட்டம் GP-II கஸ்டமர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் பிஎஸ்எனஎல் வழங்கும் சில வருடாந்திர திட்டங்களையும் இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) முன்பு 395 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கியது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட சலுகை மூலம் 425 நாள் வேலிடிட்டி கிடைக்கும். எனவே நீங்கள் இப்போது ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 425 நாள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 850ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.

இதுதவிர அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல்
நன்மைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 prepaid plan) மொத்தமாக 600ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம்.

ஒரே BSNL ரீசார்ஜ்.. 6 மாதங்களுக்கு கவலை இருக்காது.. யாரு விடுவா?

அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக தினசரி வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் அன்லிமிடெட் டேட்டாவை விரும்பும் பயனர்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் தற்போது 4ஜி (4G) சேவையை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வரும் மாதங்களில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs.750 prepaid plan offers 6 months validity and unlimited benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X