Home
News

இறங்கி அடிச்ச பிஎஸ்என்எல்.. மாசம் ரூ.125 போதும்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் திட்டங்களை பார்த்தால், மற்ற டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கின்றனர். ஏனென்றால், அடிமட்ட விலைக்கு அதிக வேலிடிட்டி இந்த நிறுவனத்தில் மட்டுமே கிடைக்கிறது. இப்போது, அப்படிவொரு திட்டத்தை பற்றியே பார்க்க போகிறோம். மாதத்துக்கு வெறும் ரூ.125 செலவில் 180 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பேக் செய்கிறது. ஆனால், இந்த திட்டம் குறிப்பிட்ட பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 750 திட்ட விவரங்கள் (BSNL Rs 750 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 6 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதற்கான மாத செலவை கணக்கிட்டால் வெறும் ரூ.125ஆக மட்டுமே இருக்கிறது. ஆகவே, இது கஸ்டமர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கும்படி இருக்கிறது.

இறங்கி அடிச்ச பிஎஸ்என்எல்.. மாசம் ரூ.125 போதும்.. 180 நாட்கள் சேவை!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. 180 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 180 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டாவை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் 180 நாட்கள் முழுவதும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 1800 எஸ்எம்எஸ் வருகின்றன.

இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் வாய்ஸ் கால்களுக்கு எந்த குறையும் இருக்கவில்லை. 6 மாதங்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பயன்படுத்தி கொள்ள முடிகிறது. ஆகவே, 6 மாதங்களுக்கு சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

இந்த ப்ரீபெய்ட் திட்டம் GP-II கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதே வேலிடிட்டியில் அனைத்து கஸ்டமர்களுக்கும் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ 897 திட்டம் பக்கா தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் தினசரி டேட்டா கிடைக்காது. இருப்பினும், லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 897 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 897 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டாவுக்கு பதிலாக 90 ஜிபி லம்ப்-சம் டேட்டா (Lumpsum Data) டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. இந்த 90 ஜிபி டேட்டாவுக்கு பிறகு முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படுகிறது. ஆகவே, 180 நாட்கள் முழுவதும் டேட்டா கிடைக்கும்.

அதாவது, 90 ஜிபி டேட்டாவை 180 நாட்கள் வேலிடிட்டி முடிவதற்குள் பயன்படுத்திவிட்டாலும், குறைவாக வேகத்தில் தொடர்ந்து டேட்டா கொடுக்கப்படும். ஆனால், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் லம்ப்-சம் முறையில் கிடைக்காது. முந்தைய திட்டத்தை போலவே தினசரி சலுகையில் கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை 6 மாதங்களுக்கு செய்து கொள்ளலாம்.

மேலும், அன்லிமிடெட் லோக்கல் கால்கள், ரோமிங் கால்கள் மற்றும் எஸ்டிடி கால்கள் கிடைக்கின்றன. இந்த திட்டம் முதலில் பார்த்த திட்டத்தைவிட ரூ.147 விலை அதிகமாக கிடைக்கிறது. இருப்பினும், சலுகைகளை பார்க்கையில் போதுமானதாகவே இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் உங்களுக்கு எந்த திட்டம் சரியாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 750 Plan With 180 Days Validity Unlimited Voice Calls 1GB Data Check 6 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X