ஜியோவிற்கு சாவல் பிஎஸ்எஸ்என்எல்-லின் ரூ.75 திட்டம்.!
ரூ.75க்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களுடன் பிஎஸ்என்எல் நிறுவனம் போட்டி போடுகிறது.
அனைத்து தனியார் தொலைபேசி நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லும் தற்போது, புதிய சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது.

தற்போது, ரூ.75க்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களுடன் பிஎஸ்என்எல் நிறுவனம் போட்டி போடுகிறது.

ரூ.75க்கான சலுகை:
ரூ.75க்கான அறிவிப்பில் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் அளவில்லா வாய்ஸ் கால்களையும், 10 ஜிபி டேட்டா 500 எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகளை பெறலாம். கூடுதலாக 500 எஸ்எம்எஸூம் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 15 நாட்கள். இருந்தாலும் நீட்டித்து கொள்ளலாம்.

நீட்டிக்கும் முறை:
ரூ.75க்கான சலுகை காலவதியானாலும், ரூ.98 அல்லது அதற்கும் அதிக கட்டணம் செலுத்தி ரூ.18 நாட்களுக்கு நீட்டித்து கொள்ளலாம். ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 98 வழங்கி வரும் சலுகைக்கு போட்டியாக பிஎஸ்என்எல்லின் திட்டம் அமைந்துள்ளது.

ஜியோவின் திட்டம்:
ஜியோ நிறுவனம் ரூ.98க்கு 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ், அளவில்லா வாய்ஸ் கால்களை வழங்கி வருகிறது. இந்த திட்டம் 28 நாட்களில் காலவதியாகும். தற்போது ஜியோ நிறுவனத்திற்கு சாவால் விடும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு அமைந்துள்ளது.

பயன்பெறும் வட்டாரங்கள்:
தற்போது அறிவித்துள்ள ரூ.75க்கான திட்டம் ஆந்திரா, தெலுங்கானா, வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. மேலும் அறிவிக்கப்பட்டுள்ள அளவில்லா இலவச அழைப்புகள் மும்பை, டெல்லி வட்டாரங்களுக்கு பொருந்தாது.

சலுகை வழங்கும் திட்டம்:
ரூ.75க்கான சலுகைகள் பயன்பெறும் மற்ற வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டவில்லை. ரூ.98, ரூ.99, ரூ.118, ரூ.137, ரூ.187, ரூ.198, ரூ.333, ரூ.349, ரூ.444, ரூ.447, 551 விலையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications