Home
News

ஜியோவிற்கு நெருக்கடி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.! ரூ.7-முதல் நெருக்கடி.!

ஜியோ நிறுவனம் அன்மையில் ரூ.19 மற்றும் ரூ.52 திட்டங்களைத் நீக்கியது. குறிப்பாக ரூ.19சாசெட் பேக் என்று கூறப்படும் திட்டம் ஆனது ஒரே ஒரு நாளைக்கு செல்லுபடியாகும் ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும். பின்பு ரூ.52 திட்டமானது மொத்தம் ஏழு நாட்களுக்கு செல்லுபடியை கொண்டது ஆகும். குறிப்பாக ஜியோ நிறுவனம் இந்த சாசெட் பேக்குகளை நீக்கியதை தொடர்ந்து பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் புதிய சலுகைகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டன.

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

மேலும் ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு 6பைசா கட்டணம் என்று அறிவித்தவுடன் பல்வேறு மக்களிடைய குழப்பங்கள் மற்றும் விமர்சனங்கள் வரத்தொடங்கிவிட்டன. இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து சரியாக பயன்படுத்தி ஏர்டெல், பிஎஸ்என்எல்,வோடபோன் நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது.

ஜியோ நிறுவனத்திற்கு

தற்சமயம் ஜியோ நிறுவனத்திற்கு போட்டிகொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் அருமையான திட்டங்கள் உள்ளன மிகக்குறைந்த விலையில் ஜியோவை விட அருமையான சிறிய சிறிய திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அந்த சிறிய திட்டங்களைப் பற்றிய முழுமையாக பார்ப்போம்.

பிஎஸ்என்எல்: ரூ.7 மற்றும் ரூ.16 திட்டங்களின் நன்மைகள்

பிஎஸ்என்எல்: ரூ.7 மற்றும் ரூ.16 திட்டங்களின் நன்மைகள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் data voucher போர்ட்ஃபோலியோவில் இருக்கும் முதல் திட்டம் ரூ.7-ஆகும். இந்த ரூ7-மதிப்புள்ள மினி பேக் திட்டமானது 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் ஒரு நாள்ஆகும்.

அடுத்து ரூ.16-மினி பேக் திட்டமானது 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது, இதன் செல்லுபடியாகும் காலம் ஒருநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

 பிஎஸ்என்எல் ரூ.56-திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.56-திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.56 திட்டமானது C_DATA56 டேட்டா வவுச்சர் என்கிற பெயரின் கீழ் ரூ.56 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது,இந்த திட்டத்தின் நன்மைகள் பொறுத்தவரை எழு நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் 1.5ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது.அதாவது நீங்கள் உங்களின் வழக்கமான ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் அனுபவிக்கும் 1.5ஜிபி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து கூடுதலாக 1.5 ஜிபி என மொத்தம் 3 ஜிபி டேட்டாவை பெறமுடியும்.

பிஎஸ்என்எல் ரூ.98 மற்றும் ரூ.197-திட்டங்கள்

பிஎஸ்என்எல் ரூ.98 மற்றும் ரூ.197-திட்டங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் DataTsunamiதிட்டமாக ரூ.98 திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபிஅளவிலான டேட்டாவை பெறமுடியும். டேட்டா வரம்பு முடிந்துபின்னர் 40கே.பி.பி.எஸ் என்ற இணைய வேகம் குறைக்கப்படும். பின்பு இந்த திட்டத்தின் கீழ் EROS NOWபொழுதுபோக்கு சேவைகளும் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் 24நாட்கள் ஆகும். இதே திட்டத்தை போலவே ரூ.197-மதிப்புள்ள DATASTV__197 திட்டமும் அணுக கிடைக்கும். இந்த ரூ.197-திட்டத்தில் தினசரி 2ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கிறது, பின்பு இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் 54நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.548 மற்றும் ரூ.1098 திட்டங்கள்

பிஎஸ்என்எல் ரூ.548 மற்றும் ரூ.1098 திட்டங்கள்

பிஎஸ்என்எல் வழங்கும் பிஆர்பிஎஸ்டிவி ரூ.548 திட்டமானது ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா அளவிலான நன்மையுன்மொத்தம் 90நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

அதன்பின்பு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1098 திட்டம் ஆனது வரம்பற்ற டேட்டா,வரம்பற்ற அழைப்பு, மற்றும் 100எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளை 84நாட்கள் வழங்குகிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் 84நாட்கள் செல்லுபடியாகும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 7 and Above Data Vouchers Offer 1GB or More Data Over Your Daily Limit : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X