அசராமல் அடித்த BSNL.. 150 நாள் வேலிடிட்டி.. 699 ரூபாயில் BSNL பயனர்களுக்கு அடித்தது லக்கு.. எந்த திட்டம்?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அட்டகாச நன்மையை வழங்குகிறது. இது 150 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. அதுவும் மலிவு விலையில் அதிக நன்மையை வழங்கியுள்ளது.
இதுவரை எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் அறிமுகம் செய்யாத ப்ரீபெய்ட் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ. 699 விலையில் வருகிறது. இது 1 அல்ல 2 அல்ல மொத்தம் 5 மாதம் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வரும் ஒரு அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டமாக வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 699 Prepaid Plan):
இந்த பிஎஸ்என்எல் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 699 Prepaid Plan) டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, எஸ்எம்எஸ் நன்மை என்று எல்லா நன்மைகளும் கிடைக்கிறது. இத்துடன் கூடுதல் வேலிடிட்டி நன்மையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் அதன் பயனர்களுக்கு மொத்தமாக 150 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது.
சரி, பிஎஸ்என்எல் வழங்கும் இந்த திட்டம் என்னென்ன நன்மைகளை வழங்கப் போகிறது என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம். இதுவொரு மலிவு விலை திட்டம் என்பதனால், இதில் நாம் அதிகப்படியான டேட்டா நன்மையை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் 500 Mb டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டா முடிந்த பிறகு, 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) நன்மை கிடைக்கும்.
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை கிடைக்கிறது. அன்லிமிடெட் அழைப்பு நன்மை என்று கூறுகையில், இதில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Call) நன்மைகளை இந்த ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது. இந்த ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம் பலன்கள் மற்றும் நன்மைகள் (BSNL Rs 699 Prepaid Plan Details and Benefits):
இத்துடன் கூடுதல் நன்மையாக, பிஆர்பிடி சலுகையானது, முதல் 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் சலுகை மட்டும் போதும், டேட்டா சலுகை குறைவாகவே இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் சரியாக இருக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டம் அதிக வேலிடிட்டியை வழங்கும் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் இது.
இது 5 மாதங்களுக்கு சலுகைகள் கிடைப்பதால், டேட்டா சலுகை குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வாய்ஸ் கால் சலுகைகளை 150 நாட்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். நீங்கள் குறைந்த விலையில் அதிக நன்மையை பெற விரும்பும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் என்றால், கட்டாயம் இது உங்களுக்கு ஒரு அட்டகாசமான திட்டமாகும்.


Click it and Unblock the Notifications








